செயற்கை நுண்ணறிவை உருவாக்கிய ஊழியர்.. அது செயல்பாட்டிற்கு வந்தவுடன் முதலில் பறிபோனது அவரது வேலைதான்
சியாட்டில்: ஏஐ தொழில்நுட்பத்தை நோக்கி உலகமே ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான 'மெட்டா' நிறுவனத்தில் அரங்கேறியுள்ள பணிநீக்க நடவடிக்கை சில நாட்களாகவே பேசுபொருளாகியுள்ளது. இதற்கிடையே அந்தப் பணிநீக்கம் மற்றும் அதன் பின்னணி தொடர்பான ஒரு போஸ்ட் பதிவு ஒட்டுமொத்த கார்ப்பரேட் உலகையும் உலுக்கியுள்ளது. அதாவது ஊழியர்கள் உருவாக்கிய AI டூலே அவர்கள் வேலையைக் காலி செய்துள்ளது.
இப்போது ஒட்டுமொத்த உலகமும் ஏஐ பின்னால் தான் போய்க் கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக ஏற்கனவே உலகெங்கும் மிகப் பெரியளவில் வேலையிழப்புகள் ஏற்படத் தொடங்கிவிட்டன. குறிப்பிட்ட நிறுவனம் என இல்லாமல் உலகளவில் இந்த வேலையிழப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் பின்னணி அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.

மெட்டா
அதாவது மெட்டா நிறுவனம் சமீப காலமாகவே தனது ஊழியர்களை ஏஐ தொழில்நுட்பத்திற்கு மாறும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாம். மேனேஜர்கள் அனைவரும் தங்கள் டீம் மீட்டிங்கில் வேகமாக வேலை செய்வது, ஏஐ பர்ஸ்ட், பெரிய டீம்களில் இருந்து சிறிய டீம்களாக மாறுவது குறித்தே பேசி வந்தனர். இந்தச் சூழலில் தான், கடந்த மே 20ம் தேதி அந்தப் பணிநீக்கம் நடந்துள்ளது. சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களில் உள்ள பல ஆிரம் மெட்டா ஊழியர்கள் ஒரே மெயில் மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. அதிகாலை 4 மணிக்கே இந்த வேலை நீக்க மெயில் சென்றுள்ளது.
ஏஐ வாரம்
இந்தப் பணிநீக்கத்திற்கு நடுவே ஜூலியன் என்ற நபர் பகிர்ந்த ட்வீட் கடந்து கார்ப்பரேட் உலகின் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதாவது சில மாதங்களுக்கு முன்பு மெட்டா நிறுவனம் ஏஐ வாரம் என ஒன்றை நடத்தியது. அப்போது வழக்கமான வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, ஊழியர்கள் அனைவரும் ஏஐ கருவிகளை உருவாக்கவும், அவற்றைப் பழகவும் அறிவுறுத்தப்பட்டனர். அந்தப் பயிற்சியின் முடிவில், நிறுவனத்திற்குள் பயன்படுத்தக்கூடிய ஆரம்பக்கட்ட ஏஐ டீல்களை ஊழியர்கள் தான் உருவாக்கிக் கொடுத்தனர்.
ஏஐ டூல்
அப்போது தான் ஜூலியனின் மனைவி, மெட்டாவின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுடன் இணைந்து ஒரு ஏஐ டூலை உருவாக்கியுள்ளார். பல மாதங்கள் கடினமாக உழைத்துள்ளார். ஆனால், அப்போதே அவருக்கு ஒரு பயம் இருந்தது. நாம் உருவாக்கும் இந்த ஏஐ கருவி ஒருநாள் நமது வேலையையே பறித்துவிடுமோ என்ற அச்சம் அவருக்கு இருந்துள்ளது. அவர் பயந்தபடியே அதுதான் நடந்திருக்கிறது. அவர் பயந்தது போலவே, அந்த ஏஐ டூல் முழுமையடைந்த சில நாட்களிலேயே, ஜூலியன் மனைவி மெட்டாவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மெட்டா இப்போது வேலை செய்யும் முறையை மொத்தமாக மாற்றி அமைப்பதாக மெட்டாவின் மனிதவள அதிகாரி ஜானெல்லே கேல் கூறியிருக்கிறார். அதாவது பெரிய பல கட்ட அனுமதி தேவைப்படும் கட்டமைப்பில் இருந்து வேகமாக முடிவெடுக்கக்கூடிய சிறிய ஏஐ குழுக்கள் மட்டுமே போதும் என்பதற்கு நகர்ந்துள்ளனர்.
மிக பெரிய முதலீடு
இதை மனதில் வைத்தே மெட்டா நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சமீபத்தில் சுமார் 7,000 பேரை ஏஐ சார்ந்த டீம்களுக்கு மாற்றியுள்ளனர். மேலும், இந்தாண்டு மட்டும் ஏஐ உட்கட்டமைப்பை டெவலப் செய்யச் சுமார் $100 பில்லியன் வரை முதலீடும் செய்துள்ளனர். ஏஐ முதலீடுகளை அதிகரிக்கவே மெட்டா பணிநீக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணிநீக்கம் மூலமாக மட்டும் 3 பில்லியன் சேமிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
-
ஐடி மேனேஜர்களுக்கு வேட்டு வைக்கும் AI.. கான்டெக்ஸ்ட் இன்ஜினியரிங் தொழில்நுட்பம்.. CTS செய்த புரட்சி! -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications