"அது ஒரு நரகம்!" சல்லி சல்லியாக நொறுங்கிய ரஷ்யா.. கலங்கிய ஜெலன்ஸ்கி! எப்போது முடியும் உக்ரைன் போர்
கீவ்: உக்ரைன் போர் இரு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் நிலையில், ரஷ்யத் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப் மாதம் இறுதியில் ரஷ்யா போரை ஆரம்பித்தது. ரஷ்யாவின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கையைத் தொடங்குவதாக அந்நாட்டின் அதிபர் புதின் அறிவித்திருந்தார்.
அப்போது முதலே போர் என்ற வார்த்தையை ரஷ்யா பயன்படுத்தாமல் ராணுவ நடவடிக்கை என்றே இதைக் குறிப்பிட்டு வருகிறது. இருப்பினும், உக்ரைனில் நடப்பதைப் பார்க்கும் அனைவருக்கும் இது போர் என்பது தெரியும்.

உக்ரைன் போர்
உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் உக்ரைன் மக்கள் போர் காரணமாக தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி உள்ளனர். இந்தப் போர் உலக நாடுகளையும் பாதித்துள்ளன. சூரியகாந்தி எண்ணெய், கோதுமை, இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தீவிர தாக்குதல்
போர் தொடங்கிய சமயத்தில் இருந்தே இரு தரப்பும் தீவிரமாகச் சண்டையிட்டு வருகின்றனர். இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்ட சில காலம் இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இருப்பினும், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. விரைவிலேயே இரு தரப்பிற்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கிவிட்டது. கடந்த சில வாரங்களாக கீவ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய ராணுவம், டான் பாஸ் பகுதியில் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

டான்பாஸ் பகுதி
இந்நிலையில், டான்பாஸ் பகுதியை ரஷ்ய ராணுவம் முற்றிலுமாக அழித்துவிட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும்,ரஷ்யப் படைகள் தொடர் குண்டுவீச்சு மூலம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளதாகவும் அவர் சாடி உள்ளார். ரஷ்யா படைகள் உக்ரைன் மக்களைக் கொல்ல தொடர்ந்து முயல்வதாகவும் உக்ரைன் மீது அதிகபட்ச தேசம் ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக உள்ளதாகவும் சாடினார்.

இனப்படுகொலை
உக்ரைன் மீது ரஷ்யா இனப்படுகொலை நடத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். கீவ் நகருக்குக் கிழக்கே உள்ள கார்கில் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர ரஷ்யா தொடர்ந்து போராடி வருவதாகவும் அவர் சாடி உள்ளார். மேலும், உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டான்பாஸ் பகுதியை ஆக்கிரமிக்க ரஷ்யா கூடுதல் ராணுவ தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

நரகம்
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேலும் பேசுகையில், "அது (டான்பாஸ்) நரகம் போல இருக்கிறது. அங்குச் சென்று பார்த்தவர்களுக்கு இது புரியும். நான் எந்தவொரு விஷயத்தையும் மிகைப்படுத்திக் கூறவில்லை. செவெரோடோனெட்ஸ்க் பகுதியில் ரஷ்யா நடத்திய மிருகத்தனமான குண்டுவீச்சு தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர்.

அழிந்துவிட்டது
மத்திய உக்ரைனின் நகரங்களில் ஒடேசா பிராந்தியத்திலும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. வடக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதி முற்றிலும் அழிந்துவிட்டது. இது உக்ரைன் நாட்டை திட்டமிட்டு அழிக்கவும் உக்ரைன் மக்களைக் கொல்லவும் திட்டமிடப்பட்டுள்ள குற்றவியல் முயற்சியாகும்" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications