"பேராபத்து!" ரஷ்ய வீரர்களிடம் ஆபத்தான அறிகுறிகள்.. செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடந்தது என்ன

Subscribe to Oneindia Tamil

கீவ்: உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், செர்னோபில் அணுமின் நிலையம் தொடர்பாக உக்ரைன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர் இன்னும் கூட முடிவுக்கு வரவில்லை. இது தொடர்பாகக் கடந்த வாரம் இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, உக்ரைன் நாட்டில் இருக்கும் ரஷ்ய ராணுவ வீரர்கள் குறைக்க ரஷ்யா சம்மதம் தெரிவித்திருந்தது. இரு தரப்பிற்கும் இடையே ஒரு வாரத்திற்கு மேலாகச் சண்டை நடைபெற்று வரும் நிலையில், போர் நிறுத்ததிற்கு இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

 உக்ரைன் போர்

உக்ரைன் போர்

போர் தொடங்கிய போது. உக்ரைன் நாட்டில் இருந்த முக்கிய அணுமின் நிலையங்களை ரஷ்யா தொடர்ந்து கைப்பற்றி வந்தது. அதன்படி 1986 பேரழிவுக்குப் பின்னர் செயல்படாமல் இருந்த செர்னோபில் அணுமின் நிலையத்தைச் சுற்றியிருந்த பகுதிகளையும் ரஷ்யா கைப்பற்றியது. இந்தச் சூழலில் ரஷ்யா வீரர்கள் சமீபத்தில் அங்கிருந்து வெளியேறினர். அமைதி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாகவே செர்னோபில் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரஷ்யா வெளியேறியதாகக் கருதப்பட்டது. இந்தச் சூழலில் உக்ரைன் இது தொடர்பாக வேறு சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

 செர்னோபில் அணுமின் நிலையம்

செர்னோபில் அணுமின் நிலையம்

செர்னோபில் அணுமின் நிலையத்தில் இருந்து ரஷ்ய வீரர்கள் அதிக அளவு கதிரியக்கத்தைப் பெற்றதாகவும் இதன் காரணமாகவே அங்கிருந்து ரஷ்ய வீரர்கள் வெளியேறி உள்ளதாகவும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அரசு மின் நிறுவனமான எனர்காட்டம் கூறுகையில், "இது தொடர்பாக ஐநா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு விசாரணை செய்கிறது. கதிரியக்கத்தின் முதல் அறிகுறியைக் கண்டு பீதியடைந்தே ரஷ்ய வீரர்கள் வெளியேறி உள்ளனர்" என்றார்.

 உக்ரைன் துணைப் பிரதமர்

உக்ரைன் துணைப் பிரதமர்

ரஷ்யர்கள் கதிர்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாக்கி உள்ளதாக உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார். அணு ஆலையைச் சுற்றியுள்ள மண்டலத்தில் டாங்கிகளை ஓட்டி சென்ற வீரர்கள், கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இதையடுத்து ரஷ்ய வீரர்கள் பெலாரஸில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கதிரியக்க தாக்குதல் காரணமாக செர்னோபில் தொழிலாளர்கள் வசிக்கும் அருகிலுள்ள நகரமான ஸ்லாவுட்டிச் நகருக்கு ரஷ்யப் படைகள் திரும்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 முதற்கட்ட ஆய்வு

முதற்கட்ட ஆய்வு

இது தொடர்பாக அடுத்த சில நாட்களில் செர்னோபிலுக்கு தனது முதற்கட்ட ஆய்வாளர்களை அனுப்ப உள்ளதாகச் சர்வதேச அணு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த போர் தொடங்கிய சில நாட்களிலேயே செர்னோபில் பகுதியைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. இருந்த போதிலும் செர்னோபில் ஆலையை உக்ரைன் ஊழியர்கள் தொடர்ந்து மேற்பார்வையிட்டு வந்தனர். கடந்த 1986ஆம் ஆண்டு செர்னோபில் ஆலை வெடித்து பெரிய விபத்தை ஏற்பட்டது. இது உலகின் மிக மோசமான அணு விபத்தாகக் கருதப்படுகிறது.

Recommended Video

    China தாக்கினால் Russia உதவிக்கு வரும் என்று நினைக்க வேண்டாம் - America| Oneindia Tamil
     பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    செர்னோபில் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாதுகாக்கும் பொறுப்பை உக்ரைனிடம் ஒப்படைக்க ரஷ்யத் தரப்பு முறையாக ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. உக்ரைன் போர் 4 வாரங்களைக் கடந்து தொடரும் நிலையில், கடந்த வாரம் துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல்வேறு விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி நேட்டோ அமைப்பில் இணையாமல் நடுநிலை வகிக்க உக்ரைன் ஒப்புக்கொண்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+