உக்ரைன் கைதிகளையும் விடுவிக்க ரெடி.. ரஷ்யாவை எதிர்க்க அதிபர் ஜெலன்ஸ்கி எடுத்த முடிவு.. பலன் தருமா
கீவ்: உக்ரைன் நாட்டில் 5 நாட்களைக் கடந்தும் போர் தொடரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தை எதிர்க்க உதவும் வகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் ராணுவத்தின் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை போரை ஆரம்பித்தது. ரஷ்ய அதிபர் புதின் உத்தரவின் பெயரில் ஆரம்பித்த இந்தப் போர் இப்போது 5 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது.
இதனால் உக்ரைன் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அங்கு நிலைமை மோசமாவதால் அங்குள்ள மாணவர்கள் உட்பட வெளிநாட்டினரை அழைத்து வரும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடரும் தாக்குதல்
இதற்கிடையே உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பெலாரஸ் எல்லையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 5 மணி நேரம் வரை நீட்டித்தது. இதில் இரு தரப்பும் ஒப்புக் கொள்ளக் கூடிய நிறைய விஷயங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் உக்ரைன் தரப்பில் சொல்லப்பட்டது. இருப்பினும், தற்போது மீண்டும் போர் உக்கிரமடைந்துள்ளது. தலைநகர் கீவ் தொடங்கிப் பல நகரங்களில் தாக்குதல் தீவிரமாகி வருகிறது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
இதனிடையே பெலராஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே ரஷ்ய ராணுவம் அத்துமீறிப் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதனால் உலக நாடுகள் ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வழியைப் பயன்படுத்த உலக நாடுகள் அனுமதி அளிக்கக் கூடாது என்றும் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

கைதிகள்
உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதாவது ரஷ்யா உடன் போரில் ஈடுபட விரும்பினால், ராணுவ அனுபவமுள்ள கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். நாட்டிற்காகப் போராட விரும்பும் கைதிகளிடம் சில சோதனைகள் செய்யப்படும் என்றும் அதன் பிறகு அவர்கள் போர்க் களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம்
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது தொடர்பாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உக்ரைன் மக்கள் ஐரோப்பியர்கள் உடனேயே இருக்க விரும்புவதாகவும் அது தான் சரியான ஒரு முடிவு என்றும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் இப்போது போர் நடைபெறும் நிலையில், உக்ரைன் விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர அனுமதிக்கும் வகையில் சிறப்பு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

தடை நடவடிக்கை
ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைக்குக்கூட உலகின் பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. Swift சர்வதேச பரிவர்த்தனை முறையில் இருந்தும் ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது. இது போன்ற தடை உத்தரவுகள் வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஃபார்முலா ஒன், ஃபிபா அமைப்புகளும் ரஷ்யாவை நீக்கியுள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications