ரஷியாவுடன் கிரிமியா இணைந்தது சட்டவிரோதம்: ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்
கீவ்: கிரிமியாவை ரஷியாவுடன் இணைத்து கொண்டது சட்டவிரோதம் என்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சோவியத் ஒன்றியம் உடைந்த பின்பு தனிநாடானது உக்ரைன். ஆனால் பெருளாதார நெருக்கடிகளை அந்நாடு எதிர்கொண்டது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைனை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிபர் யானுகோவிச் நாட்டை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து உக்ரைனின் சுயாட்சி பகுதியான கிரிமியாவை ரஷியா ஆக்கிரமித்தது.

அப்போது கிரிமியா பகுதியினர் ரஷியாவுடன் இணையவும் முடிவெடுத்தனர். இதற்கான பொதுவாக்கெடுப்பும் கிரிமியாவில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான மக்கள் ரஷியாவுடன் இணைய ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 17ந் தேதி முதல் ரஷியாவுடன் கிரிமியா இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பொதுவாக்கெடுப்பு நடத்தி கிரிமியாவை ரஷியாவுடன் இணைத்துக் கொண்டது சட்டவிரோதமானது என ஐ.நா பொதுச்சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இத் தீர்மானத்திற்கு 100 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன, 11 நாடுகள் எதிராக வாக்களித்தன, இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. உக்ரைனின் கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதற்காக நடைபெற்ற பொது வாக்கெடுப்பு செல்லாது என்றும், கிரிமியாவில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது எனவும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications