தீவிரமடையும் போர்! காசாவில் முடிந்த மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறோம்: ஐநா
காசா: பாலஸ்தீனம் மீது, இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் ஐநா தனது உதவி மையத்தை காலி செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இது குறித்து விளக்கமளித்த ஐநா, தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறோம் என்று கூறியுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போர் தொடங்கி 11 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 40,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சரியாக சொல்வதென்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,435ஆக இருக்கிறது. இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 93,534 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 25 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.
இப்படியாக நிலைமை மோசமடைந்த நிலையில் போர் நிறுத்தம் குறித்து உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க தொடங்கின. எனவே, அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டன. இவை அனைத்தும் இஸ்ரேல் ஆதரவு நாடுகள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. பணய கைதிகளை விடுவித்தல், தாக்குதலை கைவிடுதல் என இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் ஏற்க முன்வந்தது. இப்படி இருக்கும்போதுதான் போரை தீவிரப்படுத்துவதை போன்ற சம்பவம் ஒன்று நடந்தது.
அதாவது ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் போட்டு தள்ளியது. இந்த தாக்குதலை தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதற்கு பதிலடி கொடுப்போம் எனவும் ஹமாஸ் அறிவித்திருக்கிறது. மட்டுமல்லாது ஹமாஸ் ஆதரவு நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக திரும்பியுள்ளன. இதனால் மத்திய கிழக்கில் முன்னெப்பொதும் இல்லாத அளவுக்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், போர் காரணமாக ஐநாவின் உதவி மையத்தை காலி செய்ய இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே இஸ்ரேல் எச்சரிக்கை காரணமாக, ஐநா தனது உதவி மையத்தை காலி செய்திருந்தது. தற்போது மீண்டும் சொல்லியிருப்பதால்.. ஐநாவின் உதவி வழங்கும் செயல்பாடுகளை இஸ்ரேல் முடக்குகிறதா? என்று கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிகிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "எங்களிடம் உள்ளதைக் கொண்டு முடிந்ததைச் செய்கிறோம். ஒவ்வொரு வாய்ப்பையும் நாங்கள் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளார். தற்போது காசாவில் போலியோ நோய் தீவிரமாக பரவி வருகிறது. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு பின்னர் போலீயோ பரவி வருகிறது. இதை தடுப்பதில் ஐநாவின் உதவி முகாம் முக்கிய பங்கு வகித்து வந்திருந்தது என்பத குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications