குழந்தைகள், கர்ப்பிணிகள் உயிரை காப்பாற்ற.. உடனே இதை செய்யனும்! இஸ்ரேலை வலியுறுத்தும் ஐநா அதிகாரிகள்
காசா: இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காசா அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து போயுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மின் தேவைக்கு காசாவின் மருத்துவமனைகள் எரிபொருளையே நம்பியுள்ளன. எனவே உடனடியாக இஸ்ரேல் எரிபொருள் டிரக்குகளை காசாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என ஐநா அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது, பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் காசாவிலிருந்து திடீரென தாக்குதல் நடத்தியது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சுமார் 5000 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேலிடம் ராக்கெட் தாக்குதலை தடுக்கும் வகையில் அயன் ட்ரோம் சிஸ்டம் இருக்கிறது. இது பல ராக்கெட்டுகளை இடை மறித்து தாக்கி அழித்திருந்தாலும், சில ராக்கெட்டுகள் இஸ்ரேலின் நகரத்தில் விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக ஹமாஸ் போராளி குழுவினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். இப்படியாக நடத்தப்பட்ட தாக்குதலில் 1400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் குறித்து விளக்கமளித்த ஹமாஸ், சுதந்திர பாலஸ்தீனம் அமையும் வரை தாக்குதல் இனி இப்படிதான் இருக்கும் என அச்சுறுத்தியது. இதனையடுத்து இஸ்ரேல் பதில் தாக்குதலில் இறங்கியது. 18வது நாளாக இஸ்ரேல், ஹமாஸை அழிப்பதாக கூறி காசா நகரத்தை உரு தெரியாமல் சிதைத்திருக்கிறது. இந்த தாக்குதலில் 2,000 குழந்தைகள் உட்பட 5,087 பேர் உயிரிழந்துள்ளனர். 15,273 பேர் படுகாயமடைந்துள்ளனர். வான்வழி தாக்குதல் மட்டுமல்லாது தரை வழி தாக்குதலுக்கும் இஸ்ரேல் பாதுகாப்புப்படை தயாராகி வருகிறது.
மறுபுறம் உணவு, குடிநீர், மின்சாரம், எரிபொருள் இணைப்பை இஸ்ரேல் கட் செய்துள்ளது. மத்திய தரைக்கடலையொட்டியுள்ள பகுதியான காசா மொத்தமாக சுமார் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும்தான் இருக்கும். இந்த துண்டு நிலத்திற்குள் எது வரவேண்டும் என்றாலும் அது இஸ்ரேலின் அனுமதியில்லாமல் வரமுடியாது. போர் உக்கிரமடைந்துள்ளதால் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்று உலக நாடுகளும், ஐநாவும் வலியுறுத்தி வருகின்றன. அதாவது காசாவுக்குள் உதவி பொருட்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.
காசாவின் எல்லையில், எகிப்து நாட்டில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அனுப்பிய மருந்து, உணவு, குடிநீர், அறுவை சிகிச்சை கருவிகள், எரிபொருள் போன்றவை சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பொருட்களை எகிப்திலிருந்து ராஃபா எல்லை வழியாக 70 கி.மீ தூரத்திற்கு டிரக்குகள் மூலம் கொண்டு செல்ல வேண்டும். இப்படி கொண்டு செல்லப்படும் போது இஸ்ரேல் விமானப்படை இந்த வாகனங்களை தாக்காமல் இருக்க வேண்டும். இதற்கு தற்போதுதான் இஸ்ரேல் ஒப்புதல் அளித்திருக்கிறது.
இருப்பினும் தேக்கி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கண்டெய்னர்களில் வெறும் 13தான் தற்போது வரை காசாவுக்குள் சென்றிருக்கிறது. இது யானை பசிக்கு, சோளப்பொரி போன்றது என்றும், கூடுதலாக ஏராளமான உதவிகள் தேவைப்படுகிறது எனவும் காசா மக்கள் வேண்டுகின்றனர். இதில் சோகம் என்னவெனில் உள்ளே சென்ற 13 டிரக்குகளிலும் எரிபொருள் தற்போதுவரை உள்ளே செல்லவில்லை. ஏற்கெனவே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் எரிபொருளை கொண்டுதான் மருத்துவமனையின் ஜெனரேட்டர்கள் இயங்கி வருகின்றன. இந்த எரிபொருள் நாளையுடன் தீர்ந்துவிடும். எனவே உடனடியாக எரிபொருள் அவசியமாக இருக்கிறது.
இதுகுறித்து கூறியுள்ள ஐநாவின் நிவாரணக்குழு தலைவர், "காசாவுக்கு உடனடியாக எரிபொருள் வேண்டும். தற்போது இருக்கும் இருப்பு நாளையுடன் முடிவடைந்துவிடும். இங்கு கர்ப்பிணிகளும், முதியோர்களும், படுகாயமடைந்த குழந்தைகளும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். குடிநீரை சுத்தமாக்கவும் எரிபொருளிலிருந்துதான் எனர்ஜியை பயன்படுத்துகிறோம். இவர்களின் உயிரை காப்பாற்ற எரிபொருள்தான் உடனடி தேவை" என்று கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications