Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. விரைவில் கூடுகிறது ஐநா பாதுகாப்பு கவுன்சில்!

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்: லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குல் தீவிரமடைந்துள்ளது. இந்த தாக்குதலை நிறுத்த பல்வேறு நாடுகள் குரல் எழுப்பி வரும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க விரைவில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது.

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், இதற்கு அந்நாடு பதிலடி கொடுப்பதும் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. இப்படி இருக்கையில், 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம், பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை தொடுத்தது. இதில் 1000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதல்தான் தற்போது நடக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீன போருக்கான தொடக்கப்புள்ளி.

israel lebanon un security council


இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தீவிர போரை அறிவித்தது இஸ்ரேல். இந்த போரில் இது வரை 41,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பசியும், சுகாதார பாதிப்புகளும் பாலஸ்தீன மக்களை துரத்திக்கொண்டிருக்கிறது.

பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தினால், அண்டை இஸ்லாமிய நாடுகள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. குறிப்பாக லெபனானிலிருந்து இயங்கி வரும் ஹில்புல்லா அமைப்பு, இந்த போரின் போக்கையே மாற்றும் அளவுக்கு தலையீடு செய்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தொடர் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியது. ஒரு கட்டத்தில் ஹமாஸை கூட சமாளித்துவிடலாம் போல.. ஆனா ஹிஸ்புல்லாவை சமாளிப்பது தலைவலியாக இருக்கிறது என்பதை இஸ்ரேல் உணர்ந்துக்கொண்டது.

எனவே, என்ன செய்யவது என்று யோசித்து வந்த இஸ்ரேல் தற்போது பேஜர் தாக்குதலை நடத்தியிருக்கிறது. நவீன டெக்னாலஜி வளர்ந்துவிட்ட காலத்திலும், ஹிஸ்புல்லாக்கள் பேஜர்களைதான் தற்போதுவரை பயன்படுத்தி வருகிறார்கள். காரணம், இதனை ஹேக் செய்ய முடியாது. செல்போனை ஹேக் செய்து, இருப்பிடத்தை துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், பேஜரில் அப்படி செய்ய முடியாது. இருப்பினும் இந்த பேஜரை மொத்தமாக கொள்முதல் செய்த இடத்தில் சில தில்லு முல்லு வேலைகள் நடந்திருக்கின்றன.

இந்த பேஜர்கள் ஹங்கேரியில்தான் அசெம்பிள் செய்யப்பட்டிருக்கின்றன. இப்படி செய்யும்போது வெடிபொருட்கள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் இஸ்ரேல் இதை வெடிக்க செய்திருக்கிறது. பேஜர் மட்டுமல்லாது வாக்கி டாக்கி, செல்போன், சோலார் பேனலுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரி என அனைத்தும் வெடித்து சிதறியுள்ளன. இந்த தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் மூலம் ஹிஸ்புல்லா மீதும் லெபனான் மீதும் இஸ்ரேல் அதிகாரப்பூர்வ போரை தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த போரின் போக்கை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் வலியறுத்தியுள்ளார்.

ஐ.நா.வின் அரசியல் விவகாரத் தலைவர் ரோஸ்மேரி டிகார்லோ இது குறித்து கூறுகையில், “இனி வரும் நாட்களில், நாம் இதற்கு முன்னர் பார்த்த பயங்கர தாக்குதல்களை விட வீரியமான தாக்குதல்களை பார்க்க நேரிடும்” என்று எச்சரித்துள்ளார். அதேபோல ஐநா பொதுச்செயலாளர் இது குறித்து கூறுகையில், “இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் நாம் மிகப்பெரிய பிராந்திய போரில் தான் போய் நிற்போம்” என கவலை தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து விரைவில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூட்டப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இருப்பினும் இஸ்ரேல் தனது போரை நிறுத்தவில்லை.

ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதை எந்த நாடாக இருந்தாலும் கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் பெரிய பஞ்சாயத்து வெடித்துவிடும். அந்த வகையில், லெபனான் தாக்குதல் குறித்து இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+