ஆப்கானிஸ்தான் இந்திய துணை தூதரகம் அருகே நடந்த துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது !
காபூல்: ஆப்கானிஸ்தானில் மசார் இ ஷரீப் நகரில் உள்ள இந்திய துணை தூதரகம் மீது தலிபான் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு பயங்கர தாக்குதல் நடத்தினர். நேற்று முன் தினம் தொடங்கிய துப்பாக்கிச் சண்டை 25 மணிநேரத்திற்கு பிறகு தற்போது முடிவுக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் உள்ள மஸார்-இ-ஷெரிப் நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்துக்குள் ஆயுதம் தாங்கிய 4 தீவிரவாதிகள் நேற்று நள்ளிரவு உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இதையடுத்து துணை தூதரகத்துக்கு பாதுகாப்பில் இருந்த இந்திய- திபெத் எல்லை போலீஸ் கமாண்டோ படையினரும் ஆப்கான் போலீசாரும் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர்.

இருதரப்புக்கும் இடையே சில மணிநேரம் பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. தூதரகத்துக்குள் உள்ளே நுழைய முடியாத தீவிரவாதிகள் அருகே உள்ள ஒரு அடுக்கு மாடி கட்டிடத்துக்குள் நுழைந்து அங்கிருந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்தான்.
இந்நிலையில் 25 மணி நேரமாக நடந்து வந்த துப்பாக்கி சண்டை தற்போது முடிவுக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவன் உயிருடன் பிடிபட்டான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications
