For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலையலங்காரம் எல்லா செட்டப்பையும் மாத்துங்க! விர்ரென உயரும் கொரோனா! மாநில அரசுகளுக்கு பறந்த கடிதம்!

Google Oneindia Tamil News

சென்னை : கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பண்டிகை காலம் நெருங்கி வருவதால் நோய் தொற்றை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில செயலாளர்களுக்கு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Recommended Video

    இந்த கொரோனா வீரியம் அதிகம்.. முகக்கவசம் கட்டாயம் - மா சுப்பிரமணியன்

    இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்படாததாலேயே கொரோனா பாதிப்பு மாறி மாறி பதிவாகி வருகிறது.

    கொரோனா பரவுதே.. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை வருமா? அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில் இதுதான்! கொரோனா பரவுதே.. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை வருமா? அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில் இதுதான்!

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    இந்தியாவைப் பொறுத்தவரை அதிகமாக மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மேலும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்பு மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில், நேற்று 17 ஆயிரத்தைத் தாண்டி பதிவானது.

    தொடர்ந்து அதிகரிப்பு

    தொடர்ந்து அதிகரிப்பு

    தலைநகர் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் வேகம் பிடித்துள்ளன. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாஸ்க் அணியாவில்லை என்றால் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    இந்நிலையில் பண்டிகை காலம் வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில செயலாளர்களுக்கு கடிதத்தில், மாநில அரசுகள் மருத்துவ வசதி, மருந்துகள் இருப்பு ஆகியவற்றை தயாராக வைத்து இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

    மத்திய சுகாதாரத்துறை கடிதம்

    மத்திய சுகாதாரத்துறை கடிதம்

    மேலும் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பொதுக்கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் காற்றோட்ட வசதிகளை உறுதி செய்ய வேண்டும்." என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மக்களுக்கு வேண்டுகோள்

    மக்களுக்கு வேண்டுகோள்

    குறிப்பாக பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், முகக்கவசம் அணிவதில் கவனம் செலுத்துதல், தடுப்பூசி போடும் பணிகளை விரிவுப்படுத்துதல் போன்றவற்றை பின்பற்றவும் மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது போன்ற சூழல்களில் நோய் தடுப்பு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்களும் , ஆதரவு தர வேண்டுமெனவும், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    In a letter to state secretaries, Union Health Secretary Rajesh Bhushan urged the state governments to take necessary steps to prevent the spread of the disease as the festive season approaches as corona is on the rise again.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X