இந்தா வருது.. வடகொரியாவுக்கு ஆப்பு வைக்க அமெரிக்கா கொண்டு வரும் அதிநவீன ஆயுதம்!
ஏவுகணைகளை குறிவைத்து தாக்கி அழிக்கும் அதிநவீன எதிர் ஏவுகணையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது..
வாஷிங்டன்: ஏவுகணைகளை குறிவைத்து தாக்கி அழிக்கும் அதிநவீன எதிர் ஏவுகணையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. வடகொரியாவின் மிரட்டல்களுக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் இந்த நவீன எதிர் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகளை மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆனாலும் எதற்கும் அசராத வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து எதிரியின் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் சோதனை செய்து வருகிறார்.

சீண்டும் வடகொரியா
ஏவுகணை சோதனையை வடகொரியா கைவிட வேண்டும் என்பதற்காக அமெரிக்கா பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு குடைச்சல்களை கொடுத்தது. ஆனாலும் அலட்டிக் கொள்ளாத வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய கையோடு இதுதான் அமெரிக்காவுக்கான சுதந்திர தின பரிசு எனக்கூறி சீண்டியது.

உச்சக்கட்ட போர் பதற்றம்
அமெரிக்காவையும் அதன் அண்டை நாடுகளையும் பாதுகாக்க முழு திறனையும் பயன்படுத்த தயார் என ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கூறியது அமெரிக்கா. இதனால் அமெரிக்கா வடகொரியா இடையேயான போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது.

ஏவுகணைகளை அழிக்கும் ஏவுகணை
இந்நிலையில் வடகொரியாவின் கொட்டத்தை அடக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன் உடைய ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் எதிர் ஏவுகணையை அமெரிக்கா தயாரித்துள்ளது.

வடகொரியாவுக்கு பதில்
தாட் என்ற இந்த புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்ட அந்த ஏவுகணை விரைவில் சோதனை செய்யப்பட உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இந்த ஏவுகணை வடகொரியாவின் பூச்சாண்டிக்கு சிறந்த பதிலாக இருக்கும் என்றும் அமெரிக்கா கருதுகிறது.

விரைவில் சோதனை
அலஸ்காவில் உள்ள பசிபிக் விண்வெளித்தளத்தில் இந்த சோதனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வகை எதிர்-ஏவுகனைகள் குறுகிய, நடுத்தர மற்றும் இடைநிலை ஏவுகணைகளை தாக்கி வீழ்த்த பயன்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications