விமானத்தில் ஒரு இடத்தில் உட்காராமல் யோகா செய்து அலப்பறையைக் கொடுத்த 'குடுகுடு' தாத்தா!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து ஜப்பான் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர், யோகா செய்ய வேண்டும் என ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானம் அவசரமாக ஹோனோலுலுவில் தரையிறக்கப்பட்டு, அந்த பயணி கைது செய்யப்பட்டார். அவர் ஒரு குடுகுடு தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.
யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவின் தலைநகர் ஹோனோலுலுவில் இருந்து ஜப்பான் நாட்டில் உள்ள நரிட்டா நகருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
அப்போது, அந்த விமானத்தில் பயணம் செய்த 72 வயது ஹயாங்டே பே என்ற பயணி, தனது இருக்கையில் அமர மறுத்து ரகளையில் ஈடுபட்டார். அதோடு, விமானத்தின் பின்பகுதிக்குச் சென்ற அவர், யோகா மற்றும் தியானம் செய்யப்போவதாகவும் கூறினார்.
விமானத்தில் அவ்வாறெல்லாம் செய்யக்கூடாது என அவரது மனைவியும், விமானப் பணிப்பெண்களும் எடுத்துக் கூறினர். ஆனால், அவர் சமாதானம் ஆகவில்லை.
வேடிக்கை பார்த்த பயணிகளையும் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியதால், விமானத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறைக்கு நிலைமையை விளக்கிய விமானி, மீண்டும் விமானத்தை ஹோனோலுலுவுக்கே திருப்பினார்.
அங்கு விமானம் தரையிறங்கியதும் போலீசாரால் ஹயாங்டே கைது செய்யப்பட்டார். பின்னர் மற்ற பயணிகளுடன் விமானம் தாமதமாக மீண்டும் புறப்பட்டுச் சென்றது.
கைது செய்யப்பட்ட ஹயாங்டே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். விசாரணைக்குப் பின் அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவித்த நீதிபதி, அவர் ஓஹூ தீவில்தான் தங்கி இருக்க வேண்டும், மனநல சிகிச்சை பெற வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தார்.
ஹயாங்டே தென்கொரியாவை சேர்ந்தவர் என்றும், தன் மனைவியுடன் 40-வது திருமண நாளை கொண்டாடுவதற்கு ஹவாய் வந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், 88 பேர் பயணம் செய்த எகிப்து விமானத்தை, பயணி ஒருவர் போலி வெடிகுண்டு பெல்டைக் காட்டி மிரட்டி கடத்தினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், விமானத்தில் யோகா செய்வதாகக் கூறி பயணி ஒருவர் ரகளை செய்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications