சாவு பயத்தை காட்டிட்டாங்களே.. அமெரிக்க தூதரை இஸ்ரேலில் ஓடவிட்ட ஈரான் - திக்திக்..என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்அவிவ்: இஸ்ரேலும், ஈரானும் கடுமையாக மோதி வருகின்றன. இதில் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு உள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரை இரவில் தூங்கவிடாமல் ஈரான் ஓடவிட்ட சம்பவம் நடந்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று இஸ்ரேல், ஈரான் அணு சக்தி கட்டமைப்புகள் மீது குண்டு மழை பொழிந்தது.

us-ambassador-to-israel-mike-huckabee-had-to-head-to-shelter-5-times-during-the-night

அணு ஆராய்ச்சி கூடங்கள், யுரேனியம் செறிவூட்டும் மையம், ராணுவத்துக்கு சொந்தமான சுரங்க தளங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன், ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.

இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலை தாக்கி வருகிறது. இருநாடுகள் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே போர் உருவாகும் சூழல் உருவாகி உள்ளது. தற்போது ஈரான் சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலை தாக்கி வருகிறது.

இஸ்ரேலை எடுத்து கொண்டால் எதிரிகளின் ட்ரோன், ஏவுகணைகளை வானிலையே இடைமறித்து அழிக்கும் அயர்ன் டோம்களை வைத்துள்ளது. இந்த அயன் டோம்கள் ஈரானின் ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அழித்தது. இருப்பினும் சில ஏவுகணைகள் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்களை தாண்டி இஸ்ரேலை தாக்கியது. இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் ஜெருசலேமின் சில இடங்களை ஈரானின் ஏவுகணைகள் தாக்கி உள்ளது.

இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகி உள்ளனர். 30க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஈரான் தொடர்ந்து இஸ்ரேலை தாக்கி வருவதால் அந்த நாட்டு அரசு மக்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. மக்கள் அனைவரும் வீடுகள் அருகே உள்ள சுரங்க பதுங்கு குழிக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதனை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுரை வழங்கி உள்ளது. அதன்படி மொத்த இஸ்ரேல் மக்களும் சுரங்க பதுங்கு குழிக்குள் உள்ளனர்.

ஈரான் மீதான இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று அமெரிக்கா முதலில் கூறியது. அதன்பிறகு டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில் சொன்ன வார்த்தைகள் வைத்து பார்த்தபோது இஸ்ரேல் தாக்குதல் திட்டம் பற்றி முன்கூட்டியே அமெரிக்கா அறிந்து இருந்தது உறுதியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா சப்போர்ட்டில் தான் இஸ்ரேல் எங்களை தாக்கி உள்ளது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தான் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீயின் தூக்கத்தை ஈரான் ஏவுகணை தாக்குதல் கலைத்துள்ளது. இவர் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ்வில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருக்கிறார். ஈரான் டெல்அவிவை நோக்கி ஏவுகணைகளை அனுப்பியதால் அங்குள்ள மக்களுக்கு சைரன் மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் சுரங்க பதுங்கு குழிக்குள் பதுங்கினர்.

அதன்படி அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீ 5 முறை பாதுகாப்பு கருதி பதுங்கு குழிக்குள் சென்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய பதிவை செய்துள்ளார். அதில், ‛‛இஸ்ரேலின் மோசமான இரவு இது. இரவில் 5 முறை பாதுகாப்பு கருதி பாதுகாப்பான இடத்துக்கு சென்றனே். இப்போது இரவு நேரம் வந்துவிட்டது. சற்று அமைதியாக இருக்க வேண்டும். உண்மையில் அப்படி எதுவும் நடக்காது என நினைக்கிறேன். தற்போது மொத்த நாடும் பாதுகாப்பான பதுங்கு குழி அருகே இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+