கால் வைச்ச இடமெல்லாம் கண்ணிவெடி.. புலம்பும் டிரம்ப்! ஹார்வர்ட் பஞ்சாயத்தில் நீதிமன்றம் புது உத்தரவு
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு இனி அட்மிஷன் வழங்க கூடாது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து பல்கலைக்கழகம் சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கம்போல டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை போட்டிருக்கிறது. இதனால் டிரம்ப் அதிருப்தியடைந்துள்ளார்.
வெளிநாட்டு மாணவர்கள்தான் உள்ளூர் பசங்களை கெடுக்கிறார்கள். எனவே நம்மூர் பிள்ளைகளை பாதுகாக்க, வெளிநாட்டு மாணவர்கள் ஹார்வர்டில் படிக்க தடை விதிக்கிறேன் என்று நேற்று டிரம்ப் தடை போட்டார். இதற்கு எதிராக பல்கலைக்கழகம் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த தடை உத்தரவை நீதிபதி விமர்சித்தார். மட்டுமல்லாது டிரம்ப்பின் உத்தரவுக்கு தடைவிதித்தும், அதாவது இனி வெளிநாட்டு மாணவர்கள் ஹார்வர்டில் பயில தடையில்லை என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்திற்கு கட்டுப்பாடுகளை போடுவதும், அதற்கு நீதிமன்றம் தடை போடுவதும் தொடர்ந்து வருவதால், இந்த விஷயத்தில் என்ன செய்வது என்றே தெரியாமல் டிரம்ப் திணறி வருகிறார்.
என்ன நடந்தது?
உலகின் தலைசிறந்த கல்வி நிலையத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழமும் ஒன்று. தனியார் கல்வி நிறுவனமான இது, கல்விக்கு மட்டுமல்லாது ஜனநாயக இயக்கங்களுக்கும் பெயர் பெற்றதாக இருந்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா சப்போர்ட் செய்து, ஆயுதங்களை கொடுத்தபோது, அதை எதிர்தது பாலஸ்தீனத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் குரல் கொடுத்தனர். போராட்டங்களும் நடந்தன. இது டிரம்புக்கு கவுரவ குறைச்சலாக இருந்தது.
உலக நாடுகளே என்னை பார்த்து பயப்படுகின்றன. ஆனால், இந்த பல்கலைக்கழக மாணவர்கள் எனக்கு எதிராக போராட்டங்களை நடத்துகிறார்களே என்று டென்ஷன் ஆனார்.
டிரம்ப் போட்ட முதல் உத்தரவு
போதாத குறைக்கு இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு நாடுகளும், பாலஸ்தீன ஆதரவு போராட்டம் குறித்து அமெரிக்காவை உசுப்பிவிட்டது. இதனையடுத்து ஹார்வர்டில் படிக்கும் மாணவர்கள் வேறு கல்வி நிலையங்களுக்கு போக வேண்டும். ஹார்வர்டில் வெளிநாட்டு மாணவர்களுக்கு இடமில்லை என்று என்று உத்தரவிட்டார். இதற்கு எதிராக நீதிமன்றத்தை பல்கலைக்கழகம் நாடியிருந்தது. டிரம்ப்பின் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், ஹார்வர்ட் மாணவர்கள் அங்கேயே கல்வியை தொடர அனுமதித்தது.
இதனையடுத்த இரண்டாவது உத்தரவு போட்டு அதிலும் மூக்கை உடைத்துக்கொண்டிருக்கிறார் டிரம்ப். இப்படி கால் வச்ச இடமெல்லாம் கண்ணி வெடி வெச்சா எப்படி? என டிரம்ப் தரப்பு புலம்ப தொடங்கியுள்ளார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications