திடீரென பறந்த ஃபோன் கால்! இஸ்ரேலை கண்டித்த அமெரிக்கா? லெபனான் மீதான தாக்குதலால் மாறும் சீன்?
டெல் அவிவ்: ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 லெபனான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் நேரடியாக இஸ்ரேலிடம் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் உச்சமடைந்துள்ளது. ஹமாஸ் தலைவர் சின்வார் கடந்த வாரம் கொல்லப்பட்டார்.

இது ஒரு பக்கம் இருக்க ஹமாஸ் மட்டுமின்றி லெபனான் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படை மீதான தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
3 வீரர்கள் பலி: அதன்படி நேற்றிரவு லெபனான் நாட்டில் இஸ்ரேல் தீவிரமான ஏவுகணை தாக்குதலை நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்தே தாங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் லெபனான் நாட்டை சேர்ந்த 3 வீரர்கள் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.
தெற்கு லெபனானில் உள்ள பின்ட் ஜபெய்ல் என்ற பகுதியில் உள்ள யாட்டர் கிராமத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அங்குக் காயமடைந்த மக்கள் சிலர் இருந்த நிலையில், அவர்களை லெபனான் நாட்டு ராணுவம் வெளியேற்றிக் கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட 3 லெபனான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
லெபனான் வீரர்கள்: கடந்த செப். 29 முதல் லெபனானின் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. அப்போது முதல் இதுவரை மொத்தம் 13 லெபனான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மோதல் என்பது இஸ்ரேல் நாட்டிற்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கும் இடையே தான். லெபனான் வீரர்கள் மோதலிலேயே இல்லை. பொதுமக்களைக் காப்பாற்றுவது, அவசர சேவைகளில் உதவுவது ஆகியவற்றை மட்டுமே செய்து வருகிறார்கள். இருப்பினும், அவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது.
அமெரிக்கா கண்டனம்: இஸ்ரேலின் மிக நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா கூட இந்தச் சம்பவத்திற்குக் கவலை தெரிவித்துள்ளது. லெபனான் பாதுகாப்புப் படைகள் மீது தாக்குதல் நடத்துவது ஆழ்ந்த கவலையைத் தருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரிடம் கூறியிருக்கிறார். மேலும், லெபனான் ராணுவம் மற்றும் லெபனானில் உள்ள ஐநா அமைதிப்படை வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர் வலியுறுத்தினார்.
ஈரெஸ் எல்லை வழியாக காசாவுக்குள் மனிதாபிமான உதவியை அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்த லாயிட், அதேநேரம் அப்பாவி மக்களை இதில் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
ஐநா கவலை: லெபனான் ராணுவம் மட்டுமின்றி அங்குள்ள அமைதி காக்கும் படைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக ஐநா கூறியுள்ளது. கடந்த வாரம் கூட இதுபோல இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அமைதி காக்கும் படை வீரர்கள் சிலர் காயமடைந்தனர். இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் கூறியது. இருப்பினும், அங்கிருந்த ஹிஸ்புல்லா அமைப்பையே குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகவும் எதிர்பாராத விதமாக ஐநா அமைதிப் படை வீரர்கள் காயமடைந்ததாக இஸ்ரேல் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகள் இஸ்ரேல் செயலுக்குத் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தாலும் கூட, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவை முழுமையாக ஒழிக்கும் வரை தாக்குதலை நிறுத்த போவதில்லை என்பதில் இஸ்ரேல் தெளிவாக உள்ளது.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம்












Click it and Unblock the Notifications