Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டென்ஷனான டிரம்ப்.. சிரியாவில் 70 இடங்களில் குண்டுவீசிய அமெரிக்கா.. ஐஎஸ்ஐஸ் பயங்கரவாத முகாம்கள் காலி

Subscribe to Oneindia Tamil

டமாஸ்கஸ்: அமெரிக்காவுக்கும், சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே மோதல் முற்றி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரிய முறையில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் தான் தற்போது சிரியாவின் 70 இடங்களை குறிவைத்து அமெரிக்கா 100க்கும் அதிகமான குண்டுகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் அங்குள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத முகாம்கள் பெரிய அளவில் சேதத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று சிரியா. உள்நாட்டு போருக்கு பெயர் பெற்ற நாடாக இது உள்ளது. எப்போதுமே அங்கு அரசுக்கும், பயங்கரவாத அமைப்பு அல்லது கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல் இருந்து கொண்டே இருக்கும். சிரியாவின் அதிபராக பஷர் அல் அசாத் இருந்தார். இவர் ரஷ்யாவின் ஆதரவாளர். இதனால் பஷர் அல் அசாத்துக்கும், அமெரிக்காவுக்கு ஆகாது.

syria us donald trump

கடந்த 2000ம் ஆண்டு முதல் சிரியாவின் அதிபராக பஷர் அல் அசாத் தான் இருந்து வந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து புதிய அதிபராக அகமது உசேன் அல் ஷரா அதிபரானார். இவர் அமெரிக்காவுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளார். இதனால் அவருக்கு அங்குள்ள பயங்கரவாதிகள் குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. இங்கு உள்நாட்டு போர் சமயத்திலேயே அமெரிக்க ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். பெரும்பாலான அமெரிக்க ராணுவ வீரர்கள் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டனர். இருப்பினும் சுமார் 1,000 ராணுவ வீரர்கள் வரை தற்போது சிரியாவில் உள்ளனர். இவர்கள் சிரியாவின் ராணுவத்துடன் சேர்ந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது சிரியா அதிபர் அகமது உசேன் அல் ஷராவின் படைகளும், அமெரிக்க ராணுவமும் இணைந்து பயங்கரவாதிகளை அழிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்குள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கடும் கோபமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் கடந்த 13ம் தேதி ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் அமெரிக்கர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 2 அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்பட மொத்தம் 3 அமெரிக்கர்கள் இறந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டென்ஷனானர். இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் தான் திடீரென்று அமெரிக்கா, சிரியாவில் 70 இடங்களில் அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது.

போர் விமானங்களை பயன்படுத்தி அமெரிக்கா 100க்கும் அதிகமான குண்டுகளை 70 இடங்களில் வீசி உள்ளது. இந்த 70 இடங்களும் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளின் முகாம்கள், கூடாரம் என்று சொல்லப்படுகிறது. குண்டு வீச்சில் பயங்கரவாதிகளின் முகாம்கள், கூடாரம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அமெரிக்காவின் கமெண்ட் சென்டர் அடுத்தடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் அப்டேட்டுகளை வழங்கி உள்ளது. அதில், ‛‛ இன்று இரவு (அதாவது நேற்று) அமெரிக்கா மற்றும் ஜோர்டான் படைகள் இணைந்து 70க்கும் அதிகமான சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளை 100க்கும் அதிகமான குண்டுகளை பயன்படுத்தி துல்லியமாக தாக்குதல் நடத்தினோம். வலிமையின் மூலமாக அமைதி வருகிறது'' என்று தெரிவித்து இருந்தது.

அதுமட்டுமின்றி இன்னொரு பதிவில், ‛‛இந்த பெரிய அளவிலான தாக்குதலை நடத்துவதற்காக போர் விமானங்கள், தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற தளவாடங்களைப் பயன்படுத்தப்பட்டன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இதனால் தற்போது பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+