மனைவியின் கடைசி நாள் புற்றுநோய் சிகிச்சையை ரோஜாக் கூட்டத்துடன் கொண்டாடிய கணவர்!

Subscribe to Oneindia Tamil

ஓக்லாந்து, நெப்ரஸ்கா, அமெரிக்கா: அமெரி்க்காவில் ஒரு கணவர் தனது மனைவியின் கடைசி நாள் புற்று நோய் சிகிச்சையை வித்தியாசமாக கொண்டாடி தனது மனைவியை அசத்தி விட்டார்.

அமெரிக்காவின் ஓக்லாந்து நகரைச் சேர்ந்தவர் பிராட் போஸ்கட். இவரது மனைவி அலிசன். அலிசனுக்கு மார்பகப் புற்று நோய் பாதிப்பு உள்ளது. இதனால் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் பிராட் கூடவே இருந்து மனைவியை பரிவுடன், கணிவுடன் கவனித்துக் கொண்டார்.

US husband celebrates his wife's last day cancer treatment with 500 roses

இந்த நிலையில் கடைசி நாள் சிகிச்சையும் வந்தது. கடைசி நாளில் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த முடிவு செய்தார் பிராட். இதற்காக அவர் ஐடியா செய்தார். அதன்படி 500 ரோஜாக்களை அவர் வாங்கி வந்தார். அது மட்டுமல்லாமல் புற்றுநோய் சிகிச்சை ஆய்வகத்திற்கு நன்கொடையாக அளிக்க 4500 டாலர் நிதியையும் அவர் வசூலித்தார். ரோஜாக்களை மனைவிக்குக் கூட தெரியாமல் ரகசியமாக மருத்துவமனையில் வைத்திருந்தார்.

கடைசி நாள் சிகிச்சை முடிந்ததும் அந்த ரோஜாக்களை மொத்தமாக மனைவியிடம் கொடுத்து அவரை ஆச்சரியப்படுத்தி விட்டார்.

என் மனைவி மீதான அளவு கடந்த அன்பைக் காட்ட எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் அவருக்குப் பிடித்த ரோஜாக்களை வரவழைத்துக் கொடுத்தேன் என்றார் பிராட். அலிசனும் தனது கணவரின் அன்பைக் கண்டு நெகிழ்ந்து போய் விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+