Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛2 அலர்ட்’’ அமெரிக்க உளவுத்துறை சொல்லியும் கோட்டைவிட்ட இஸ்ரேல்! ஹமாஸ் ‛அட்டாக்கின்’ ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

இஸ்ரேல்: இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் குறித்து முன்னதாகவே 2 முறை அமெரிக்கா உளவுத்துறை அலர்ட் செய்ததும், இஸ்ரேல் கோட்டை விட்டுள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தாக்குதலுக்கு ஒரு நாளுக்கு முன்பு கூட அமெரிக்க உளவுத்துறை இஸ்ரேலை எச்சரித்துள்ளதாம்.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான யுத்தம் இன்று 8 வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 7 ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் 7 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.

US intelligence 2 times including Days before Hamas attack warned of increased risk for Palestinian-Israeli conflict

இந்த தாக்குதலை தொடர்ந்து தான் இஸ்ரேல் போரை அறிவித்து காசா நகரை தாக்கி வருகிறது. அதேபோல் ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த மோதல் என்பது அதிகரித்து வருகிறது. தற்போது வரை இருதரப்பிலும் 2,400 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

தற்போது காசாவை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் படை தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளது. இதற்காக காசா வின் வடக்கு பகுதியில் வசிக்கும் 10 லட்சம் மக்களை தெற்கு பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் 24 மணிநேரத்தில் இவ்வளவு மக்கள் இடம்பெயர்வது கடினமான காரியம். இதனால் இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் ஐநா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் காசா மக்கள் பலரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி வெளியேறி வருகின்றனர். பலர் அண்டை நாடான எகிப்தை நோக்கி அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மேலும் தற்போதைய அறிவிப்பின்படி இஸ்ரேல் கசா நகர் மீது தாக்குதல் நடத்த பெரிய அளவில் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படை இடையேயான போர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இத்தகைய சூழலில் தான் தற்போது ஒரு திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இஸ்ரேல் மீது ஹமாஸ் படை தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக 2 முறை அமெரிக்க உளவுத்துறை அலர்ட் செய்துள்ளது. குறிப்பாக கடந்த 7 ம் தேதி பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு நாள் முன்பு கூட அமெரிக்கா அலர்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான விபரங்களை சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த செப்டம்பர் 28 ம் தேதியும், அக்டோபர் 5ம் தேதியும் இஸ்ரேலுக்கு அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. அதாவது ஹமாஸால் மோதல் உருவாகலாம் என கூறியுள்ளது. மேலும் தாக்குதலுக்கு ஒருநாளுக்கு முன்பு அதாவது அக்டோபர் 5ம் தேதி அமெரிக்க உளவுத்துறை சார்பில் ஹமாஸ் வேகமான தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. அலர்ட்டாக இருக்கும்படி கூறியுள்ளது.

இருப்பினும் கூட இஸ்ரேல் அரசு சுதாரிக்காமல் இருந்துள்ளது. பொதுவாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே அடிக்கடி மோதல் ஏற்படும் சூழலில் அமெரிக்க உளவுத்துறை முன்கூட்டியே அலர்ட் தொடர்பான தகவல்களை அனுப்பும். அப்படியான தகவல் தான் இது என இஸ்ரேல் நினைத்து இந்த விஷயத்தை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இதுவரை இல்லாத வகையில் திட்டமிட்டு ஹமாஸ் படை, இஸ்ரேல் மீது 7 ஆயிரம் ஏவுகணை ஏவி கொடூரமான தாக்குதல் நடத்தியது. அதோடு இந்த மோதல் தற்போது போராக உருமாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+