"ரஷ்ய ஜெனரல்கள் குறி!" உக்ரைன் போரில் அமெரிக்காவின் சிஐஏ.. பக்கா ஸ்கெட்ச் உடன் களமிறங்கும் உக்ரைன்
மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில், இந்த போரில் அமெரிக்க உளவுத் துறையின் உதவி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். இறுதியில் ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. அங்கு சில மாதங்களாகவே பதற்றமான சூழல் நிலவி வந்த போதிலும், ரஷ்யா முழு வீச்சில் போரைத் தொடங்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்த போர் சுமார் 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் போர்
உக்ரைன் போர் தொடங்கிய உடனேயே மறுபுறம் அமைதி பேச்சுவார்த்தையும் தொடங்கி நடைபெற்றது. முதலில் இந்த அமைதி பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன், துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன் பின்னர், சில காலம் சண்டை நடைபெறாமல் இருந்த போதிலும், மீண்டும் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கிவிட்டது.

அத்துமீறித் தாக்குதல்
ரஷ்யா அத்துமீறி நடத்தும் இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அனைத்து நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகப்படியான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளது. அதேபோல உக்ரைனுக்கு ஆதரவாகவும் தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிநவீன ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.

அமெரிக்க உளவுத் துறை
அதேநேரம் உக்ரைன் நாட்டிற்கு உலக நாடுகள் வழங்கும் உதவிகள் போதுமானதாக இல்லை என்றே உக்ரைன் அதிபர் கூறி வருகிறார். இதனிடையே போரில் ரஷ்ய ஜெனரல்கள் பலரைக் கொல்ல உக்ரைன் ராணுவத்திற்கு உளவுத்துறை உதவிகளை அமெரிக்கா வழங்கி வருவதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா படைகளின் நடமாட்டம், இருப்பிடங்கள் உள்ளிட்ட தகவல்களை உக்ரைன் ராணுவத்திற்கு அமெரிக்கா வழங்கி வருகிறது.

துல்லிய தாக்குதல்
ரஷ்யா ராணுவத்தின் நடமாடும் மொபைல் ராணுவத் தலைமையகம் பற்றிய விவரங்களையும் அமெரிக்கா தொடர்ச்சியாக உக்ரைன் நாட்டிற்கு வழங்கி வருகிறது. இத்துடன் தனது உளவு அமைப்புகளிடம் இருந்து கிடைக்கும் தகவல்களைக் கொண்டே ரஷ்யப் படைகளைக் குறித்து வைத்து உக்ரைன் ராணுவம் துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது அதி நவீன துல்லிய தாக்குதல்கள் காரணமாக ரஷ்ய மூத்த அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

பதில் இல்லை
இதுநாள் வரை உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே வழங்கி வந்ததாகக் கருதப்பட்ட நிலையில், உளவுத் துறை தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக வெளியாகி உள்ள இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை இது தொடர்பாக உடனடியாக பதிலளிக்கவில்லை.
Recommended Video

12 ரஷ்ய ஜெனரல்கள்
இந்த போர் தொடங்கியது முதலே சுமார் 12 ரஷ்ய ஜெனரல்களை உக்ரைன் படைகள் கொன்றுள்ளனர். அமெரிக்க உளவுத்துறை அளித்த தகவல்கள் உதவி உடன் எத்தனை தளபதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டனர். அதேநேரம் வலுவான ரஷ்யா படைகளைச் சமாளிக்க அமெரிக்காவின் தகவல்கள் பெரியளவில் உதவி இருக்கும் என்றே அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிடுகின்றனர்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications