ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்.. தாக்குதலை தீவிரப்படுத்திய டிரம்ப்! மோசமடையும் நிலைமை

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரானுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அந்நாட்டின் துறைமுகங்களை முற்றுகையிடும் வேலையை தீவிரப்படுத்தியிருக்கிறது அமெரிக்கா. குறிப்பாக, அரபிக்கடல் பகுதியில் அமெரிக்காவின் USS Rushmore (LSD 47) போர்க்கப்பல் ஈரானுக்கு எதிரான கடல்வழி முற்றுகை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரானின் துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வெளியேறும் வணிகக் கப்பல்களைக் கட்டுப்படுத்துவதே இந்த முற்றுகையின் முக்கிய நோக்கமாகும். உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் தவிர மற்ற வணிகத் தொடர்புகளைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

US Iran Tensions Escalate

USS Rushmore ஒரு 'Dock Landing Ship' வகையைச் சேர்ந்தது. அதாவது இது கடல் மற்றும் தரை என இரண்டிலும் செயல்படும் திறன் கொண்ட வீரர்களையும், சிறிய ரகப் படகுகளையும் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இக்கப்பல் USS Tripoli மற்றும் USS New Orleans ஆகிய கப்பல்களுடன் இணைந்து 'Tripoli Amphibious Ready Group'-ன் ஒரு பகுதியாக இப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த முற்றுகை நடவடிக்கைகளுக்கு யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் தலைமை தாங்குகிறது. இதனுடன் 11-க்கும் மேற்பட்ட தாக்குதல் கப்பல்கள் அரபிக்கடல் மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த முற்றுகைக்குப் பதிலடியாக ஈரான், ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக அறிவித்துள்ளதால், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்தியாவின் நிலை என்ன?

இந்தியா, தனது கச்சா எண்ணெய் தேவையில் 85%-க்கும் மேலாக இறக்குமதிதான் செய்கிறது. ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் இந்தியாவின் 60%-க்கும் அதிகமான எண்ணெய் விநியோகம் நடைபெறுகிறது. இந்த முற்றுகையால் சப்ளை தடைபடும்போது, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100-க்கும் மேல் உயர வாய்ப்புள்ளது.

சர்வதேச சந்தையில் விலை உயரும்போது, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை கணிசமாக உயரக்கூடும். ஏற்கெனவே தனியார் பெட்ரோலிய நிறுவனங்களான நயாரா மற்றும் ஷெல் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை ஏற்றியிருக்கின்றன. இப்படி இருக்கையில், நிலைமை தொடர்ந்து மோசமடைந்தால், பொதுத்துறை நிறுவனங்களும் எரிபொருள் விலையை உயர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+