அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்!
தெஹ்ரான்: உலகின் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானம் என்று சொல்லப்படும், அமெரிக்காவின் F-35 ஐந்தாம் தலைமுறை விமானத்தை, ஈரான் அசால்ட்டாக வீழ்த்தியுள்ளது.
இதுவரை யாராலும் வீழ்த்தப்படாத விமானம் என்கிற பெருமையை பெற்றிருந்த இந்த விமானத்தை, ஈரான் இரண்டாவது முறையாக வீழ்த்தியிருப்பது அமெரிக்காவின் விமானப்படை பலத்தை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ஈரானின் பலம்
கடந்த மாதம் 19ம் தேதி, F-35 ஐந்தாம் தலைமுறை விமானம் வீழ்த்தப்பட்டிருந்தது. அதேபோல, ஈரான் உள்ளூர் நேரப்படி, இன்று அதிகாலை 2.30 மணியளவில் மற்றொரு F-35 ஐந்தாம் தலைமுறை விமானத்தை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை வீழ்த்தியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. இது அமெரிக்காவுக்கு மான பிரச்சனையாக மாறியிருக்கிறது. உலகின் தலைசிறந்த ராணுவ படையை வைத்திருக்கிறோம் என்று சொல்லி வந்த டிரம்ப், இப்போது மொக்கை வாங்கியிருக்கிறார்.
என்ன நடந்தது ஈரானில்?
ஈரானின் முக்கிய பகுதிகள் மீது தாக்குதல் நடத்த அதிகாலையில், அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலிலிருந்து F-35 விமானம் புறப்பட்டிருக்கிறது. இந்த விமானத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ரேடாரில் சிக்காத வகையில் நவீனமாக இந்த விமானம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் விமானத்தை டிடெக்ட் செய்த ஈரான், ஏவுகணையை வீசி அந்த விமானத்தை வீழ்த்தியிருக்கிறது. இதனை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்திருக்கின்றனர்.
உறுதி செய்த அமெரிக்கா
ராய்டரஸ் செய்தி ஊடகம் இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், "ஒரு அமெரிக்க அதிகாரி அமெரிக்கப் போர் விமானம் ஒன்று ஈரான் மீது சுட்டு வீழ்த்தப்பட்டதை உறுதிப்படுத்தினார். உயிர் பிழைத்தவர்களைத் தேடும் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி, வேறு விவரங்களை வழங்கவில்லை. பென்டகனும், அமெரிக்க மத்திய கட்டளைப்பிரிவும் கருத்து தெரிவிக்கவில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விமானிகள் தப்பித்தார்களா?
வீழ்த்தப்பட்ட எஃப்-35 விமானத்தின் விமானி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று ஈரானின் அரசு செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் மத்திய இராணுவத் தலைமையகம், மோதலின் போதும், விபத்தின் போதும் ஏற்பட்ட பெரும் வெடிப்பைக் கருதி, விமானி வெளியேறியிருக்க வாய்ப்பில்லை என்று பிரஸ் டி.வி.யிடம் கூறியது. விமானி பிடிபட்டிருக்கலாம் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுட்டு தள்ள உத்தரவு
அதேபோல, F-15 ரக போர் விமானம் ஒன்றும் வீழ்த்தப்பட்டிருப்பதாகவும், இதிலிருந்து விமானிகள் தப்பித்திருக்கலாம் எனவும் ஈரான் கூறியிருக்கிறது. பாராசூட் மூலம் தரையிறங்கிய விமானிகளை பிடித்த தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்திருக்கிறது. அதேநேரம், அவர்களை கண்டால் சுட்டுதள்ளுமாறு, உள்ளூர் மக்களுக்கு ரகசிய அறிக்கையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தேடுதல் வேட்டை
விமானிகள் உயிருடன் இருக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணியில் US C-130 ரக விமானம் மற்றும் இரண்டு UH-60 Black Hawk ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்கா அனுப்பியிருக்கிறது. இரண்டும் விபத்து நடந்த பகுதியில் குறைவான உயரத்தில் பறந்து தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளன. இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications