US - Iran War Tension: வெடிக்கும் போர் ? ஈரானை தாக்க ரெடியான அமெரிக்கா.. இஸ்ரேலில் வெளியேறும் தூதரக அதிகாரிகளால் திடுக்
டெல்அவிவ்: ''இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இன்றே வெளியேற வேண்டும். கிடைக்கும் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து அமெரிக்கா செல்ல வேண்டும்'' என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் மைக் ஹுக்கப்பி திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இன்று இரவே ஈரானை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்க உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, இஸ்ரேலில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற அமெரிக்கா உத்தரவிட்டதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடும் மோதல் உள்ளது. நாளுக்கு நாள் இந்த மோதல் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பை நிறுத்த வேண்டும்.
இதற்கான யுரேனியம் செறிவூட்டலை முழுமையாக நிறுத்த வேண்டும். நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
டீலுக்கு அழைத்த டிரம்ப்
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இதுதொடர்பாக ஈரான், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.
இதுதொடர்பாக ஈரான் -அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இருப்பினும் ஒப்பந்தம் ஏற்படவில்லை. இது டொனால்ட் டிரம்பை கோபப்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி ஈரானை, டிரம்ப் தொடர்ந்து மிரட்டி வருகிறார்.
ஈரானை தாக்க திட்டம்
ஈரான் உடனடியாக ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மோசமான பேரழிவை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி உள்ளார். அதுமட்டுமின்றி, மத்திய கிழக்கு பிராந்தியத்தை ஈரானையொட்டிய பகுதிகளில் அமெரிக்கா தனது படைகளை குவித்துள்ளது.
போர் விமானங்கள், போர் கப்பல்களை டிரம்ப் ஈரானை சுற்றி நிறுத்தி உள்ளார். இதனால் எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை உள்ளது.
வெளியேற உத்தரவு
இந்நிலையில் தான் தற்போது அமெரிக்க புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹுக்கப்பி தனது தூதரக அதிகாரிகள் அனைவருக்கும் இ-மெயில் ஒன்றை அனுப்பி உள்ளார். காலை 10.24 மணிக்கு அனுப்பப்பட்ட அந்த இ-மெயிலில் கூறப்பட்டுள்ளதாவது:
''இஸ்ரேலில் இருந்து விரைவாக வெளியேற வேண்டும். அமெரிக்கா செல்லும் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். இப்போது நாட்டில் இருந்து விரைவாக வெளியேறுவதற்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதேவேளையில் இந்த மெயிலை பார்த்து பயப்பட தேவையில்லை. வெளியேற விரும்புகிறவர்கள். விரைவில் திட்டமிட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
பின்னணி என்ன?
இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் தனது ஊழியர்கள், அதிகாரிகளுக்கு இப்படியான அறிவுரையை வழங்கி இருப்பது கவனம் பெற்றுள்ளது. அதோடு மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்ற சூழலை எடுத்து காட்டும் வகையில் உள்ளது.
மேலும் ஈரானை தாக்க அமெரிக்கா தயாராகிவிட்டதா? என்ற கேள்வியை எழுந்துள்ளது. ஏனென்றால் ஈரான் மீது தாக்குதலுக்கு தயங்கமாட்டோம் என்று அமெரிக்கா கூறும்போதெல்லாம் ஈரான் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் கூறியது.
ஈரானை தாக்கும் அமெரிக்கா?
அது என்னவென்றால், ''ஈரான் மீது அமெரிக்கா தாக்கினால் உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ராணுவ முகாம், விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலும் 'அட்டாக்' செய்யப்படும்'' என்று ஈரான் பலமுறை தெளிவுப்படுத்தி விட்டது.
இப்படியான சூழலில் தான் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் கூறியுள்ளார். இதனால் ஈரானை அமெரிக்கா தாக்க தயாராகிவிட்டதா? அமெரிக்கா, ஈரானை தாக்கினால் பதிலுக்கு ஈரான், இஸ்ரேலை குறிவைக்கலாம்.
இதனால் முன்னெச்சரிக்கையாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேறும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தற்போது மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அதோடு புதிய போர் வெடிக்கிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே












Click it and Unblock the Notifications