For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு.. ‛வானவில்’ டீசர்ட் அணிந்த பத்திரிகையாளர் திடீர் பலி.. கத்தாரில் சர்ச்சை

Google Oneindia Tamil News

தோகா: கத்தாரில் உலககோப்பை கலால்பந்து போட்டி நடந்து வரும் நிலையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பான சர்ச்சை இன்னும் விவாதத்தில் இருந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் தான் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக ‛வானவில்' டீசர்ட் அணிந்து சென்றதாக சமீபத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். இதன் பின்னணியில் கத்தார் அரசு இருக்கலாம் என்ற சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது.

கத்தார் நாட்டில் உலககோப்பை கால்பந்து போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. லீக் போட்டி முடிந்து நாக் அவுட் சுற்றில் 16 அணிகள் மோதின.

நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்ற 8 அணிகள் தற்போது காலியிறுதி போட்டியில் மோதி வருகின்றன. காலியிறுதி ஆட்டங்கள் நேற்று துவங்கி இன்றுடன் முடிவடைய உள்ளன.

ஒரே வியப்பு.. உலககோப்பை போட்டியில் சார்ஜ் ஏற்றப்படும் கால்பந்துகள்.. அட காரணத்த பாருங்க.. சூப்பரே!ஒரே வியப்பு.. உலககோப்பை போட்டியில் சார்ஜ் ஏற்றப்படும் கால்பந்துகள்.. அட காரணத்த பாருங்க.. சூப்பரே!

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு தடை

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு தடை

கத்தாரில் உலககோப்பை கால்பந்து போட்டி நடந்து வரும் நிலையில் சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன. இஸ்லாமிய நாடு என்பதால் கத்தாரில் பீர் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும் திருமணம் செய்து கொள்ளாதவர்கள் உடலுறவு வைத்து கொள்ளவும், LGBT (Lesbian, Gay, Bisexual and Transgender)எனும் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கும் (ஓரினச்சேர்க்கையாளர்) அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பத்திரிகையாளர் ஆதரவு

பத்திரிகையாளர் ஆதரவு

இதற்கு ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த அணியினர் One Love பேண்ட் அணிய முடிவு செய்தனர். ஆனால் மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடுக்கப்படும் என்றதால் வீரர்கள் அந்த முயற்சியை கைவிட்டனர். இருப்பினும் அமெரிக்கா-வேல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி கத்தார் அல் ரய்யானில் உள்ள அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்க பத்திரிகையாளர் கிராண்ட் வால் சென்றார்.

டீசர்ட்டில் வானவில் கொடி

டீசர்ட்டில் வானவில் கொடி

கிராண்ட்வால் வானவில் போன்ற LGQTக்கான சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம். ஊதா வண்ணங்கள் கொண்ட கொடி அடங்கிய டீசர்ட்டை அணிந்து அமெரிக்க பத்திரிகையாளர் கிராண்ட் வால் சென்றார். இதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். டீசர்ட்டை கழற்ற கூறியதோடு, போன் பறிக்கப்பட்டது. இருப்பினும் பத்திரிகையாளர் என்ற நிலையில் பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் மன்னிப்பு கோரி 25 நிமிடங்களில் அனுமதித்தனர். இதுபற்றி கிராண்ட் வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

 மயங்கி விழுந்து இறந்த பத்திரிகையாளர்

மயங்கி விழுந்து இறந்த பத்திரிகையாளர்

இந்நிலையில் தான் பத்திரிகையாளர் கிராண்ட் வால் திடீரென்று மயங்கி விழுந்து இறந்துள்ளார். உலகோப்பை கால்பந்து போட்டியில் நேற்று கத்தாரில் உள்ள லுசைல் ஐகானிக் மைதானத்தில் அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியின்போது செய்தி சேகரிக்க சென்ற கிராண்ட் வால் திடீரென்று மயங்கி விழுந்து இறந்துள்ளதாக கூறப்படுகிறது. கிராண்ட் வால் இறந்திருப்பதை அவரது சகோதரர் எரிக் உறுதி செய்துள்ளார்.

சகோதரர் குற்றச்சாட்டு

சகோதரர் குற்றச்சாட்டு

மேலும் கிராண்ட் வால் இறப்பில் மரணத்தில் கத்தார் அரசுக்கு தொடர்பு இருக்கலாம் என அவர் சந்தேகத்தை கிளப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எரிக் பேசுகிறார். அதில் அவர், ‛என் பெயர் எரிக் வால். நான் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட்டில் வசித்து வருகிறேன். நான் கிராண்ட் வாலின் சகோதரர். நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். உலகக் கோப்பைக்கு எனது சகோதரர் வானவில் இருந்த டீசர்ட் அணிந்து செல்ல நான் தான் காரணம்.

கொலையா? என சந்தேகம்

கொலையா? என சந்தேகம்

என் சகோதரர் மிகவும் ஆரோக்கியமாக இருந்தார். அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக என்னிடம் கூறினார். என் சகோதரர் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என நினைக்கிறேன்'' என்றார். எரிக் வீடீயோவை தொடர்ந்து கத்தார் அரசு மீது அவர் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர். இதேபோல் கிராண்ட் வாலின் மனைவியும் தொற்றுநோயியல் நிபுணருமான செலின் ஷாக்காகி உள்ளார்.

உயிரிழப்புக்கு காரணம் என்ன?

உயிரிழப்புக்கு காரணம் என்ன?

இதேபோல் இன்னும் சில அமைப்பினர் கிராண்ட் வால் மரணத்தில் சந்தேகத்தை கிளப்பி உள்ளனர். இருப்பினும் கூட சில நாட்களுக்கு முன்பு கிராண்ட் வால் மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது அவர் இறந்துள்ளார். அவரது இறப்பு எப்படி நடந்தது? என்பது தெரியாத நிலையில் அவரது இறப்புக்கு LGBTயின் பல்வேறு குழுவினர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

English summary
With the FIFA World Cup underway in Qatar, the gay controversy continues to be debated. In this case, the American journalist who was recently arrested for wearing a rainbow'' dessert in support of homosexuals has fainted and died. Suspicions have been raised that the Qatari government may be behind this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X