டிரம்ப்-ன் சீக்ரெட் திட்டம்.. ஈரானுக்கு எதிராக கிளம்பும் உலக நாடுகள்.. Hormuz-க்கு விடிவுகாலம் பிறக்குது?!
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா - ஈரான் கட்டுப்பாடுகளால் கப்பல் போக்குவரத்து மொத்தமாக முடங்கியிருக்கும் வேளையில் பாதுகாப்பான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய அமெரிக்கா தனது நட்பு நாடுகளை ஒரு புதிய சர்வதேச கூட்டணியில் இணையுமாறு வலியுறுத்தி வருகிறது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவல்படி உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள சிக்கல் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இப்பாதையில் மீண்டும் பாதுகாப்பான எரிபொருள் போக்குவரத்தை உறுதி செய்ய அமெரிக்க தனது நட்பு நாடுகளின் படையை ஒன்று திரட்டுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணை முழுமையாகத் திறந்து வணிகத்துக்கு தயாராக உள்ளது என்று அறிவித்திருந்தார். ஆனால், அதற்குப் பிறகும் இப்பகுதியில் கப்பல் போக்குவரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால், உலக நாடுகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹார்முஸ் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமெரிக்க வெளியுறவுத் துறை ஒரு முக்கிய திட்டத்தை தயாரித்துள்ளது. "மேரிடைம் ஃப்ரீடம் கன்ஸ்ட்ரக்ட்" (Maritime Freedom Construct) என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் செவ்வாய்க்கிழமை அமெரிக்க தூதரகங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் அடிப்படை என்வென்றால் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளிநாட்டு அரசுகளுடன் தொடர்பு கொண்டு ஹார்முஸ் வழித்தடத்தில் எரிபொருள் போக்குவரத்தை சீராக்க உலக நாடகள் தங்களுடைய கடற்படை பலத்துடன் இந்தக் கூட்டணியில் பங்கேற்குமாறு வலியுறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா தலைமையிலான இந்தப் புதிய கூட்டணி, உளவுத்துறை தகவல் பகிர்வு, பாதுக்காப்பு பணிகளை ஒருங்கிணைப்பது மற்றும் தடைகளை அமல்படுத்துவதில் ஆதரவு அளிப்பதில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம் ஹார்முஸ் நீரிணையில் நிலையான பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது.
மேலும் அமெரிக்காவின் இந்த மேரிடைம் ஃப்ரீடம் கன்ஸ்ட்ரக்ட் திட்டத்தின் வாயிலாக அமெரிக்கா - ஈரான் மத்தியிலான பிரச்சனையை உலக நாடுகள் - ஈரான் மத்தியிலான பிரச்சனையாக மாற்றும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
உலகின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதி இந்தப் பாதையின் வழியாகவே நடைபெறுவதால், இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் உலகப் பொருளாதாரத்துக்கு பெரும் நன்மை ஏற்படும் என்பது அமெரிக்காவின் திட்டமாக இருந்தாலும், இது அமெரிக்க கூட்டணியின் வலுவை காட்டும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதேபோல் ஈரானும் தனது நட்பு நாடுகளை சேர்த்தால் பிரச்சனை பெரிதாகும்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications