சிரியா, ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சரமாரியாக குண்டுவீச்சு!!
மொசூல்: சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகளின் கூட்டுப்படை அதிரடி வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.
ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி இஸ்லாமிய நாட்டை பிரகடனம் செய்துள்ளனர்.

இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி முதல் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த தெக்ரித் நகரை, அமெரிக்காவின் உதவியுடன் ஈராக் ராணுவம் கைப்பற்றி உள்ளது.
தொடர்ந்து அங்கு இருதரப்பு இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரங்களில் மட்டும், அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகளின்படை 15 வான்வழி தாக்குதலை ஈராக் மற்றும் சிரியாவில் நடத்தி உள்ளது.
ஈராக்கில் மொசூல், பாஜீ நகரங்களை சுற்றிலும், தீவிரவாதிகளின் நிலையை குறிவைத்து 9 தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதேபோல் சிரியாவிலும் 6 இடங்களில் தாக்குல் நடத்தப்பட்டு உள்ளது. கோபானி நகரை சுற்றில் 5 இடங்களிலும், ஹாசாகாக் பகுதியில் ஒரு இடத்திலும் குண்டு வீசப்பட்டது என்று அமெரிக்க ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications