அமெரிக்காவில் தர்பூசணி பழத்தை கத்தியால் ஓங்கி குத்தியவர் கைது
நியூயார்க்: அமெரிக்காவில் தர்பூசணியை கத்தியால் குத்தியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் கனக்டிகட் மாநிலத்தில் உள்ள தாமஸ்டனைச் சேர்ந்தவர் கார்மைன் செர்வெல்லினோ(49). அவர் ஒரு பிளாஸ்டிக் பையில் போதைப் பொருள் வைத்திருந்ததாக பெண் ஒருவர் கடந்த 4ம் தேதி போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் வந்து பார்த்தபோது அவரிடம் போதைப் பொருள் இல்லை. அந்த பெண்ணுக்கும் கார்மைனுக்கும் ஆகாது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கார்மைன் ஒரு தர்பூசணிப் பழத்தை இறைச்சியை வெட்டும் கத்தியால் குத்தியுள்ளார். மேலும் கத்தியை பழத்தின் மீது குத்தி அதை சமையல் அறையில் வைத்துள்ளார். இதை பார்த்த அந்த பெண் கார்மைன் வெறித்தனத்தோடு தான் பழத்தில் கத்தியை குத்தியிருக்கிறார் என்றும், அவர் தன்னை மிரட்டவே இவ்வாறு செய்துள்ளார் என்றும் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் கார்மைனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ரூ. 30 ஆயிரம் பணம் செலுத்தி வெளியே வந்தார்.
ஒரு தர்பூசணியை கத்தியால் குத்தியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டது பலரையும் வியக்க வைத்துள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications