அமெரிக்காவை அலறவிடும் ஈரான்.. கடற்படை தலைமையகத்தை தாக்கிய ஏவுகணை.. பெரிய போர் வெடித்தது
டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதற்கு பதிலடியை ஈரான் கொடுக்க தொடங்கி உள்ளது. இஸ்ரேல் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதலை ஈரான் தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி பிற அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் முகாம்களை நோக்கி ஈரான் தாக்க தொடங்கி உள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் இன்று தாக்குதலை தொடங்கி உள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்காவும் இணைந்துள்ளது. இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்பட பல இடங்களில் ஏவுகணைகளை ஏவி தாக்கி வருகிறது.

இஸ்ரேல் தனது நாட்டில் இருந்து ஈரானை தாக்கும் நிலையில் அமெரிக்கா, ஈரானை சுற்றி நிறுத்தி உள்ள போர்க்கப்பல்கள், போர் விமானங்களை பயன்படுத்தி ஈரானை அட்டாக் செய்கிறது.
இஸ்ரேல் மீது தாக்குதல்
இதற்கு ஈரான் பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக ஈரான், இஸ்ரேலின் டெல்அவிவ், ஜெருசலேம் நகரை நோக்கி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய இஸ்ரேல் அறிவுரை வழங்கி உள்ளது.
அமெரிக்க கடற்படை தளம்
அதேபோல் ஈரான், அமெரிக்காவுக்கும் பதிலடியை கொடுக்க தொடங்கி உள்ளது. அமெரிக்காவை எடுத்து கொண்டால் மத்திய கிழக்கில் பல்வேறு நாடுகளில் ராணுவ முகாம், கடற்படைமுகாம், விமான தளங்களை வைத்துள்ளது.
இந்நிலையில் தான் ஈரான் முதற்கட்டமாக பஹ்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்காவின் கடற்படை தளத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. பஹ்ரைனில் அமெரிக்காவி்ன் 5வது கடற்படை தலைமையகத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கத்தார் – யூஏஇ
அதேபோல் கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளத்தையும் ஈரான் குறிவைத்துள்ளது. கத்தாரில் அமெரிக்காவுக்கு சொந்தமான அல் உதித் விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகளை அனுப்பியது. இருப்பினும் அங்குள்ள வான்வெளி பாதுகாப்பு அமைப்பு ஈரானின் ஏவுகணையை இடைமறித்து அழித்துள்ளது. இதனை கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
BREAKING: Iran targets U.S. base in Bahrain with missile attack. - Tasnim pic.twitter.com/Qnmv2UEaFu
— Open Source Intel (@Osint613) February 28, 2026
அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் அமெரிக்காவுக்கு சொந்தமான அல் தாப்ரா விமான தளம் அமைந்துள்ளது. இந்த விமான தளத்தை நோக்கியும் ஈரான் தாக்குதலை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக அபுதாபியில் சில இடங்களில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அமெரிக்கா அதிர்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்கா கோபம்
ஏனென்றால் அமெரிக்கா ஈரானை தாக்கும் அதேவேளையில் தனது நட்பு நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும் விமானப்படை தளம், கடற்படை தளத்தை ஈரான் தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு உள்ளது.
இதனால் ஈரானின் இந்த பதிலடி தாக்குதல் அமெரிக்காவை மேலும் கோபப்படுத்தி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், இஸ்ரேல், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளிடம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகளும் செங்கடலில் இஸ்ரேல், அமெரிக்கா கப்பல்களை குறிவைத்து தாக்க தொடங்கி உள்ளன. இதனால் மொத்த மத்திய கிழக்கு நாடுகளிலும் பெரிய போர் வெடித்து பதற்றம் உச்சமடைந்துள்ளது.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை! -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே











Click it and Unblock the Notifications