டிரம்பின் முகத்திரையை கிழித்த ஜெய்சங்கர்.. இந்தியா - பாக் மோதல் எப்படி நின்றது? US-க்கு ரோல் இல்லை

Subscribe to Oneindia Tamil

ஆம்ஸ்டர்டாம்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை அமெரிக்கா தான் நிறுத்தியது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இதனை நம் நாடு முற்றிலுமாக புறம்தள்ளி வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை. இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் எப்படி நடந்தது? என்பது பற்றி நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பரபரப்பான விளக்கத்தை அளித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை அமெரிக்க தான் நிறுத்தியது என்று அதன் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இதனை நம் நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் மோதல் விவகாரத்தில் 3வது நாட்டின் தலையீடு என்பது இல்லை.

us-played-no-role-on-ceasefire-between-india-pakistan-says-s-jaishankar

போர் நிறுத்தம் என்பது இருநாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதற்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த விஷயத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை என்று நம் வெளியுறவுத்துறை பலமுறை கூறிவிட்டது.

ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்போ, ‛‛இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரிய போர் வெடிக்க இருந்தது. அணுஆயுத போராக கூட இது வர வாய்ப்பிருந்தது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தான் பேசி போரை நிறுத்தினர்'' என்று மார்த்தட்டி வருகிறார். இதுவரை 7 முறைக்கு அதிகமாக இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நாங்கள் தான் என்று டிரம்ப் பேசிவிட்டார்.

இந்நிலையில் தான் பாகிஸ்தான் - இந்தியா இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை. உண்மையில் என்ன நடந்தது என்று நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக நெதர்லாந்தை அடிப்படையாக கொண்ட ஊடகத்துக்கு ஜெய்சங்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அந்த நாட்டின் கொள்கையாக வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்தியா பலமுறை கவலை தெரிவித்துள்ளது. அதேபோல் பாகிஸ்தானின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 26 அப்பாவிகளை கொன்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். அப்பாவிகள். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். பாகிஸ்தானின் தலைமை குறிப்பாக ராணுவ தளபதி மத கண்ணோட்டத்துடன் செயல்பட்டு வருகிறார். அவர் மதத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்களால் வழிநடத்தப்பட்டு வருகிறார்.

ஏப்ரல் 22ம் தேதி நடந்தது போன்ற தாக்குதல் நடக்கும் பட்சத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடரும் என்ற மெசேஜை உறுதியாக சொல்கிறோம். இந்த ஆபரேஷன் நடவடிக்கை என்பது பயங்கரவாதிகளை குறிவைத்து தான் இருக்கும். பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அரவணைத்தால் நாங்கள் அவர்களை தாக்குவோம்.

ஆபரேஷன் நடவடிக்கை என்பது இன்னும் முடியவில்லை. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கொள்கைகள் இன்னும் அப்படியே உள்ளது. ராணுவ நடவடிக்கைகள் தான் நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது இருநாடுகள் இடையே ராணுவ ரீதயிலான மோதல் நிறுத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அபரேஷன் அப்படியே உள்ளது. மோதலை நிறுத்த பாகிஸ்தான் தான் எங்களுக்கு மெசேஜ் அனுப்பியது. நாங்கள் தாக்குதலை நிறுத்துகிறோம் என்று கூறினர். இதனால் நாங்கள் அதற்கு ஒப்புக்கொண்டோம்'' என்று கூறினார்.

இந்த வேளையில் ‛‛அமெரிக்கா தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறுகிறாரே? அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உங்களை தொடர்பு கொண்ட பிறகு தான் போர் நின்றதாக கூறுகிறாரே?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு ஜெய்சங்கர், ‛‛நாங்கள் ஒன்றை உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். எங்களுடன் அமெரிக்கா மட்டுமின்றி நிறைய பேர் பேசினார்கள். அவர்களிடம் நாங்கள் கூறியது ஒன்று தான். பாகிஸ்தான் மோதலை நிறுத்த விரும்பினால் அதனை எங்களிடம் நேரடியாக கூற வேண்டும் என்று தெரிவித்தோம். அதன்பிறகு பாகிஸ்தான் ஜெனரல் எங்களின் ஜெனரலை அழைத்து தாக்குதலை நிறுத்துவதாக கூறினார். இந்த மோதல் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் - இந்தியா இடையேயான பேச்சுத்தான் காரணம். 3வது நபரின் தலையீடு என்பது இல்லை'' என்று உறுதியாகி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+