ஒரே நாள்.. ஒரே அடியில் தலைகீழாக மாற்றிய டிரம்ப்.. ஈரானுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

ஜெனிவா: ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நான் ஆர்வம் காட்டவில்லை. ஒப்பந்தம் ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும் அதை பற்றி எல்லாம் எனக்கு கவலை கிடையாது. நாங்கள் அந்நாட்டின் அணுசக்திகட்டமைப்பை அழித்துவிட்டோம். அவர்களால் அதனை தயாரிக்க முடியாது. அதேநேரத்தில் அடுத்த வாரம் ஈரானுடன் அடுத்தவாரம் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரான் நாடு ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்க போவாக அறிவித்தது முதலே அதற்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காஸாவிற்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருவதாக நம்பும் இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுதங்கள், தங்களின் எதிரிகளின் கைகளுக்கு எளிதாக சென்றுவிடும் அச்சம் தெரிவித்து வந்தன. அமெரிக்காவுமே ஈரானை நம்ப முடியாது என்று கூறி,அந்த நாடு அணு ஆயுதங்களை தயாரிக்க தடை விதித்துள்ளது. ஈரானுக்கு பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஈரானுக்கு, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக உள்ளன.

US President Donald Trump has announced that talks with Iran will take place next week

அமெரிக்காவிடம் உதவி

இந்நிலையில் ஈரான் தற்போது அணு ஆயுதங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டியதால் அச்சம் அடைந்த இஸ்ரேல், ஈரான் நாட்டின் அணுசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்க தொடங்கியது.இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஈரானும் இஸ்ரேலும் மாறி மாறி தாக்குலை தொடர்ந்த நிலையில், ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் உதவி தேவை என்று இஸ்ரேல் அழைத்தது. என்ன மாதிரியான உதவி என்றால், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை மொத்தமாக அழிக்க அமெரிக்காவால் முடியும் என்பதால் அந்த உதவியை கேட்டது.


ஈரானின் 3 அணுசக்தி தளங்களை தாக்கிய அமெரிக்கா

இதன்படியே தன்னுடைய பி-2 ரக விமானங்கள் மூலம் ஈரானின் 3 அணுசக்தி தளங்களை கடந்த திங்கள் அன்று அமெரிக்கா அதிரடியக தாக்கியது. ஈரானின் முக்கியமான அணு உலைத்தளமான போர்டோ அணுசக்தி தளத்தில் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தகர்த்தது. இந்த பங்கர் பஸ்டர் குண்டுகள்பூமிக்கு அடியில் 200 மீட்டர் ஆழத்தில் எது இருந்தாலும் அதனை அழித்துவிடும். அந்த அளவிற்கு வலிமையான குண்டு ஆகும்.

ஈரான் பதிலடி

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்த உள்ளதாக அறிவித்தது. தாக்குதல் நடத்தப்போவதை முன்கூட்டியே ஈரான் ராணுவம் அறிவித்தது. அதன்படி கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமான அல் உதெய்த் மீது நேற்று முன்தினம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள அமெரிக்க வீரர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்தது. இதைப்போல ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீதும் தாக்குதல் நடத்தியது. எனினும் இந்த தாக்குதல்களில் எந்த சேதமும் ஏற்படவில்லை. அமெரிக்காவின் வான்பாதுகாப்பு அமைப்பு வானிலையே ஏவுகணை தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது.அதனை டிரம்ப் உறுதி செய்தார்.


போர் முடிந்தது

ஈரானில் அணு உலைகளை தகர்ப்புக்கு பின்னர் பேச்சுவார்த்தைக்கு அழைத்த டிரம்ப், ஈரான் இஸ்ரேல் என இருநாடுகளையும் சமாதானமாக போக உத்தரவிட்டார். இருநாடுகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அவரே அறிவித்தார். டிரம்ப் அறிவித்த பின்னரே இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. 12 நாள் நடந்த நேற்று முடிவுக்கும் வந்தது.

டிரம்ப் பேட்டி

இந்நிலையில் ஈரான் உடன் அடுத்த வாரம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். நேட்டோ அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக நெதர்லாந்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தாக்குதல் காரணமாக ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த இடங்களில் எல்லாம் தாக்குதல் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

போர் கிடையாது

கத்தாரில் உள்ள அமெரிக்க படை தளத்தை ஈரான் தாக்குவதற்கு முன்னர் அங்கிருந்து வீரர்கள் அனைவரும் வெளியேறி விட்டனர். இஸ்ரேல் ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அமெரிக்கா நடத்திய தாக்குதல் காரணமாகவே 12 நாட்கள் நடந்த போர் முடிந்தது.

ஈரானுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நான் ஆர்வம் காட்டவில்லை. ஒப்பந்தம் ஏற்பட்டாலும் , ஏற்படாமல் போனாலும், அதை பற்றி எல்லாம் எனக்கு கவலை கிடையாது. நாங்கள் அந்நாட்டின் அணுசக்திகட்டமைப்பை அழித்துவிட்டோம். அவர்களால் அதனை தயாரிக்க முடியாது. அதேநேரத்தில் அடுத்த வாரம் ஈரானுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறும். அப்போது ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம். அது பற்றி எனக்கு தெரியாது. சீனாவுக்கு ஈரான் கச்சா எண்ணெயை விற்பனை செய்யலாம்.உக்ரைன் மீதான தாக்குதலில் இருந்து வெளியேற ரஷ்ய அதிபர் புடின் விரும்புகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+