ஹிரோஷிமாவில் ஒபாமா.. அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலில் பலியானோருக்கு மரியாதை
டோக்கியோ: 2-ம் உலகப்போரின் போது அமெரிக்காவால் அணு குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்ட ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு அமெரிக்கா அதிபர் ஒபாமா வரலாற்று சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டு அங்குள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6.ம் தேதி வரலாற்றில் மறக்க முடியாத நாளாகும். அந்நாளில் நடைபெற்றுக் கொண்டிருந்த 2-வது உலகப்போரின்போது, அமெரிக்கா ‘லிட்டில் பாய்' என்ற அணுகுண்டை ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரத்தின் மீது போட்டது. இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர், இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில மூன்று நாட்களில் மேலும் ஒரு அணு குண்டை ஜப்பானின் நாகசாகி நகரிலும் அமெரிக்கா போட்டது. இதில் 75 ஆயிரம் போர் கொல்லப்பட்டனர்.

இந்த இரண்டு அணுகுண்டு வீச்சுகளும் வரலாற்றில் மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, எந்தளவுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தன.
இந்த மாபெரும் தாக்குதல் நடத்தியதின் விளைவாக, அமெரிக்காவின் அதிபர்கள் யாரும் அந்த நகருக்கு தமது பதவிக்காலத்தில் சென்றதே இல்லையாம். ஜிம்மி கார்ட்டரும் பதவிக்காலம் முடிந்த பின்னர்தான் ஹிரோஷிமாவுக்கு சென்றார்.

இந்த நிலையில் ஜப்பானில் உள்ள ஷிமா நகரில் ‘ஜி-7' அமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாட்டுக்கு சென்றிருந்தார். அவர் ஹிரோஷிமாவில் தாக்குதல் நடந்த இடத்திற்கும் சென்றிருந்தார். இந்த பயணத்தின் மூலமாக ஹிரோஷிமாவுக்கு தனது பதவிக்காலத்தில் சென்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற சிறப்பை ஒபாமா பெற்றிருக்கிறார்.
ஹிரோஷிமாவில் அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக அங்கு அணையா விளக்குடன் கூடிய நினைவு சின்னம் உள்ளது. அங்கு சென்ற ஒபாமா நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அப்போது பேசிய ஒபாமா, வேதனை நிறைந்த பிளவைக்கூட உறவுவின் மூலம் இணைக்கமுடியும் என்பதற்கு இந்த பயணம் சான்று. இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு இது ஒரு வாய்ப்பு. உலகில் இனி அணு ஆயுதங்கள் தேவை இல்லை என்ற நிலையில், உலக அமைதியையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்த பயணம் அமைந்துள்ளது. மேலும் உலகின் பலம் வாய்ந்த உறவுகளில் ஒன்றாக அமெரிக்கா-ஜப்பான் உறவு அமைந்துள்ளது என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications