நீங்கள் அனுபவிக்க போகிறீர்கள்.. டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த தாலிபான்கள்.. வெடித்தது புதிய சண்டை!
Recommended Video
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரின் முடிவுகளுக்காக விரைவில் அனுபவிக்க போகிறார் என்று தாலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ், தாலிபான் உட்பட தீவிரவாத இயக்கங்களை அழிப்பதற்காக அமெரிக்கா அங்கு கடந்த 11 வருடங்களாக போர் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இதை முடிவிற்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
இதற்காக கடந்த ஞாயிற்றுக் கிழமை அமெரிக்காவின் கேம்ப் டேவிட் பகுதியில் தாலிபான்கள் உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரகசிய மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் இது கடைசியில் ரத்து செய்யப்பட்டது.

என்ன காரணம்
காபூலில் நடந்த வெடிகுண்டு தாக்குதலால் இந்த மீட்டிங் ரத்து செய்யப்பட்டது. காபூலில் கடந்த வாரம் தலிபான் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் ஒரு அமெரிக்க வீரர் உட்பட 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் நான் இந்த சந்திப்பை ரத்து செய்கிறேன், என்று டிரம்ப் இதுகுறித்து குறிப்பிட்டார்.

என்ன சொன்னார்
அதுமட்டுமில்லாமல், தாலிபான்கள் தவறான முடிவை எடுத்துவிட்டனர். அவர்கள் எல்லோரும் இறக்க போகிறார்கள், என்று டிரம்ப் குறிப்பிட்டார். இது தாலிபான் தரப்பை தற்போது கோபம் அடைய வைத்துள்ளது. அமெரிக்காவுடன் இனி எப்போதும் பேச்சுவார்த்தை கிடையாது என்று தாலிபான்கள் கூறியுள்ளது.

தாலிபான்கள் அறிக்கை
இது தொடர்பாக தாலிபான்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா எங்களுடன் பேச்சுவார்த்தையை ரத்து செய்ததை ஏற்க முடியாது. பொதுவாக ஒரு போரை நிறுத்த இரண்டு வழிகள் இருக்கிறது. ஒன்று ஜிஹாத் முறையில் சண்டையிடுவது. இன்னொன்று அமைதி பேச்சுவார்த்தை.

சண்டை தீர்வு
இதில் அமைதி பேச்சுவார்த்தை வேண்டாம் என்று அமெரிக்கா முடிவு செய்துவிட்டது. அதனால் நாங்கள் சண்டையை கையில் எடுக்க போகிறோம். அவர்கள் விரைவில் இதற்காக வருத்தப்படுவார்கள். டிரம்ப் அவரின் முடிவுக்காக அனுபவிக்க போகிறார், என்று தாலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications