இதுதான் டிரம்ப் ஸ்டைல்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் இதை எதிர்பார்க்கல! கமலா ஹாரிஸுக்கு பெரிய ஷாக்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்னும் இரண்டு வாரங்களில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே அங்குப் பல மாகாணங்களில் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையைப் பயன்படுத்தி மக்கள் வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர். மேலும், தற்போது வெளியாகியுள்ள புதிய சர்வேக்களில் இருதரப்பிற்கும் இடையே கடும் போட்டி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
உலக வல்லரசான அமெரிக்காவின் அதிபர் யார் என்பதைத் தேர்வு செய்யும் தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. நவ. 5ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு: வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தாலும் கூட அமெரிக்காவில் பெரும்பாலான மாகாணங்களில் பொதுமக்கள் இப்போதே வாக்களிக்கலாம். அங்கு early voting எனப்படும் முன்கூட்டியே வாக்களிக்கும் முறை இருப்பதே இதற்குக் காரணம்.
அதாவது நமது நாட்டில் வாக்குப்பதிவு நாளில் மட்டுமே பொதுமக்களால் வாக்களிக்க முடியும். ராணுவ வீரர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடுவோர் மட்டுமே முன்கூட்டியே தபால் மூலம் வாக்களிக்க முடியும். மற்றவர்கள் வாக்குப்பதிவு நாளில் மட்டுமே ஓட்டுப்போட வேண்டும். பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக அரசு விடுமுறையும் அளிக்கப்படும். அதேநேரம் அமெரிக்காவில் அப்படி இல்லை.
மக்கள் ஆர்வம்: அங்குத் தேர்தலுக்கு முன்கூட்டியே பொதுமக்கள் வாக்களிக்கலாம். இதை early voting எனப்படும் முன்கூட்டியே வாக்களிக்கும் முறை என்கிறார்கள். பெரும்பாலான மாகாணங்களில் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த முன்கூட்டியே வாக்களிக்கும் முறையில் வாக்களிக்கலாம். அதேநேரம் மின்னசோட்டா, தெற்கு டகோட்டா மற்றும் வெர்ஜீனியா மாகாணங்களில் சில வாரங்களுக்கு முன்பே இந்த early voting ஓபன் ஆகிவிட்டது.
இப்போது புளோரிடா மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களில் இந்த ஆரம்ப வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது. புளோரிடாவில் நேற்று தொடங்கிய நிலையில், விஸ்கான்சின் மாகாணத்தில் இன்று முதல் இந்த முறையில் வாக்களிக்க முடியும். அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ள நிலையில், அதில் 47 மாகாணங்களில் இந்த முறையில் வாக்களிக்க முடியும். அலபாமா, மிசிசிப்பி மற்றும் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணங்களில் மட்டுமே முன்கூட்டியே வாக்களிக்க முடியாது.
சர்வேக்கள்: இதற்கிடையே வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், பல்வேறு அமைப்புகள் அங்கு நடத்திய சர்வே முடிவுகளும் வெளியாகி வருகிறது. அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ள நிலையில், அதில் குறிப்பிட்ட சில மாகாணங்கள் எப்போதும் ஜனநாயக கட்சிக்கே வாக்களிக்கும். சில மாகாணங்கள் எப்போதும் குடியரசு கட்சிக்கே வாக்களிக்கும். இடையில் இழுபறியில் உள்ள சில மாகாணங்கள் தான் தேர்தல் முடிவுகளை முடிவு செய்யும். இதை ஆங்கிலத்தில் battleground states என்பார்கள்.
இந்த மாகாணங்களில் யார் வெல்வார்களோ அவர்களே ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புகள் அதிகம். இந்த battleground மாகாணங்களில் யாருக்கும் தெளிவான லீட் இல்லை. யார் வேண்டுமானாலும் வெல்லலாம் என்றே சூழலே இருக்கிறது. தி வாஷிங்டன் போஸ்ட் நடத்திய சர்வேயில் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் என இரு தரப்பிற்கும் தலா 47% மக்கள் ஆதரவளித்துள்ளனர்.
டிரம்ப்: மேலும், அங்குள்ள பைஃப்தெர்டிஎய்ட் (fivethirtyeight) என்ற அமைப்பு அனைத்து சர்வேக்களையும் தொகுத்து வெளியிடும். அதில் டிரம்ப் வெல்ல 51% வாய்ப்பு இருப்பதாகவும், கமலா ஹாரிஸுக்கு 49% வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது போட்டி மிக கடுமையாக இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அதேநேரம் டிரம்பிற்கான ஆதரவு தேர்தல் நெருங்க நெருங்க அதிகரித்தே வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அவர் வெல்லும் வாய்ப்புகள் அதிகம்.
-
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications