வெளியானது முதற்கட்ட எக்ஸிட் போல்! டிரம்ப் vs கமலா ஹாரிஸ்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு மாகாணங்களிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். இதற்கிடையே இப்போது அமெரிக்க அதிபர் தேர்தலின் முதற்கட்ட எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் யாருக்கு சாதகமான சூழல் இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடும் நிலையில், குடியரசு கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கிறது.

பல்வேறு மாகாணங்களிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். பல மாகாணங்களில் மணிக் கணக்கில் கூட நின்று மக்கள் வாக்களித்து வருகிறார்கள்.
எக்ஸிட் போல்: இதற்கிடையே இப்போது அமெரிக்க அதிபர் தேர்தலின் முதற்கட்ட எக்ஸிட் போல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. ரிக்காவில் நாடு முழுக்க வாக்குப்பதிவு முடியும் வரை யாருக்கு ஆதரவு அதிகம் இருக்கிறது என்பது தெரிய வராது. இருப்பினும், எக்ஸிட் போல்களில் கேட்கப்பட்ட மற்ற கேள்விகள் குறித்த பதில்கள் வெளியாகும். அதன்படி இந்த எக்ஸிட் போலை வைத்துப் பார்க்கும் போது அமெரிக்க மக்கள் கோபமாகவும் அதிருப்தியாகவும் இருப்பது தெரிய வருகிறது.
முன்கூட்டியே வாக்களித்தவர்கள் மற்றும் தபால் மூலம் வாக்களித்தவர்களிடம் கருத்துக் கேட்டு இந்த எக்ஸிட் போல் முடிவை சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் 43% மக்கள் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 29 சதவீதம் பேர் கோபத்தில் உள்ளதாகக் கூறியுள்ள நிலையில், 7 சதவீதம் பேர் மட்டுமே உற்சாகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். சுமார் 61% மக்கள் அமெரிக்காவின் சிறந்த நாட்கள் வருங்காலத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கமலா ஹாரிஸுக்கு சாதகம்: அதேபோல என்சிபி செய்தி நிறுவனமும் முதற்கட்ட எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸுக்கு சாதகமான விஷயங்கள் உள்ளன. அதாவது பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் ஜனநாயகத்தைக் காப்பதை மனதில் வைத்தே அதிக பேர் வாக்களித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
சுமார் 36% மக்கள் ஜனநாயகத்தைக் காக்க வாக்களித்துள்ளதாகக் கூறியுள்ளனர். 30% பேர் பொருளாதாரத்தை மனதில் வைத்து வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கமலா ஹாரிஸ் ஜனநாயகத்தைக் காப்போம் என்பதை முன்வைத்தே பிரச்சாரம் செய்த நிலையில், இது அவருக்குச் சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இது தவிரக் கருக்கலைப்பு விவகாரத்தை மனதில் வைத்து 14 சதவீதம் பேரும், குடியேற்றம் விவகாரத்தை மனதில் வைத்து 11 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அதிபர் தேர்தலுக்கான போட்டி மிகக் கடுமையாக இருப்பதையே இது காட்டுகிறது. எனவே, இந்தாண்டு அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக சில நாட்கள் வரை கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது.
பின்னணி: இந்தாண்டு அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் முதலில் முன்னிலையில் இருந்தார். ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க டிரம்ப் கை ஓங்கியதாகக் கருத்துக்கணிப்புகள் கூறின. தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு வரை வந்த கருத்துக்கணிப்புகளில் போட்டி கடுமையாக இருந்தாலும் டிரம்பிற்கு சற்று லீட் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேநேரம் தேர்தல் நாளில் வந்த கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் கம்பேக் கொடுத்திருந்தார். இதனால் போட்டி மிக மிகக் கடுமையாகவே இருக்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications