சர்ரென மேலே வந்த டிரம்ப்.. ஸ்வீப் செய்ய போகிறார்.. வெளியான கருத்து கணிப்பு.. கமலாவிற்கு சிக்கல்!
சென்னை: நவம்பர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என பிரபல பொருளாதார நிபுணர் கிறிஸ்டோப் பராட் கணித்துள்ளார்.
"உலகின் மிகத் துல்லியமான பொருளாதார நிபுணர்" என்று அழைக்கப்படும் பிரபல பொருளாதார நிபுணர் கிறிஸ்டோப் பராட் வெளியிடும் கருத்து கணிப்புகள் ஒவ்வொரு அமெரிக்க அதிபர் தேர்தலில் கவனிக்கப்படும்.

பிரபல பொருளாதார நிபுணர் கிறிஸ்டோப் பராட் வெளியிடும் கணிப்பு என்பது மக்கள் மனநிலை, மார்க்கெட் நிலவரம், உள்ளூர் பொருளாதாரம், மாநிலங்களில் நிலவும் சூழ்நிலைகள் ஆகியவற்றை வைத்து கணிக்கப்படும். அதன்படி நவம்பர் 5 ஆம் தேதி நடக்கும் தேர்தலில் டிரம்ப் "க்ளீன் ஸ்வீப்" செய்வார் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க சந்தைகள், கருத்துக் கணிப்புகள், தேர்தல் மாடல்கள், நிதிச் சுயமாய் போன்ற பல்வேறு அளவீடுகளைப் பார்க்கும்போது, தற்போதைய நிலவரப்படி, டிரம்ப் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது. டிரம்ப்தான் க்ளீன் ஸ்வீப் செய்ய போகிறார், என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் டிரம்ப் - கமலா ஆகியோரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்று கணிப்புகள் வெளியாக தொடங்கி உள்ளன. முன்னதாக டிரம்ப் - பிடன் இடையே போட்டி இருந்த போது டிரம்ப்தான் வெற்றிபெறுவார் என்று கூறப்பட்டது. கணிப்புகள் டிரம்பிற்கு ஆதரவாக இருந்தன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கியமான கட்டமாக கருதப்படும், அதிபர் வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதம் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்தது. ஏபிசி சேனல் மூலம் இந்த விவாதம் 90 நிமிடம் நடந்தது. முன்னதாக அதிபர் பிடன் - முன்னாள் அதிபர் டிரம்ப் இடையே விவாதம் நடக்க.. அதில் பிடன் மோசமாக சொதப்பினார். அதன்பின் அதிபர் தேர்தலில் இருந்து பிடன் விலக துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப்.. பிடன் போல கமலா ஹாரிஸை எளிதாக "bully" செய்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டுதான் விவாதத்திற்கு வந்தார். ஆனால் விவாதத்தில் நடந்தது அதற்கு எதிர்மாறான சம்பவம். பிடன் போல என்னை எளிதாக சீண்டிவிட முடியாது என்பதை தமிழ்ப்பெண் கமலா ஹாரிஸ் பல இடங்களில் நிரூபித்துக்காட்டினார்.
பிரபல பொருளாதார நிபுணர் கிறிஸ்டோப் பராட், டிரம்ப்தான் வெல்வார் என்று கணித்தாலும்.. கடந்த பத்து அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களில் ஒன்பது தேர்தலை துல்லியமாகக் கணித்த பிரபல வரலாற்றாசிரியரான ஆலன் லிக்ட்மேன், இந்த தேர்தலை வேறு மாதிரி கண்டித்துள்ளார்.. இந்த முறை தேர்தலில் பெரிய சர்ப்ரைஸ் இருக்காது . பலரும் கமலா ஹாரிஸ் வெல்வார் என்று நினைக்கிறார்கள். அதுதான் நடக்க போகிறது. தேர்தலுக்கு முந்தைய இறுதி வாரங்களில் எந்தவொரு எதிர்பாராத நிகழ்வும் முடிவை மாற்ற வாய்ப்பில்லை.
கணிப்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை விட அதிக புள்ளிகளை பெறுவதால் அவரே வெற்றிபெறுவார், என்று ஆலன் லிக்ட்மேன் கணித்துள்ளார். இரண்டு பேரும் வேறு வேறு மாதிரி வெளியிட்ட கணிப்புகள் அமெரிக்காவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன.
Lichtman இன் தேர்தல் கணிப்புகள் "13 கீ" எனப்படும் தனித்துவமான மாதிரியை அடிப்படையாகக் கொண்டவை, இது 13 வகையான கேள்விகளின் மூலம் செய்யப்படும் கணிப்பு ஆகும். தற்போதைய வேட்பாளர்களின் செயல்பாடு, வலிமை ஆகியவற்றை வைத்து வெற்றியாளர்களை மதிப்பிடும் முறையாகும். இந்த முறை மட்டுமன்றி தி எக்கனாமிஸ்ட், டைம்ஸ் ஆகிய ஊடகங்களுக்கும் கமலா ஹாரிஸ்தான் 54% வெல்ல வாய்ப்பு உள்ளது, டிரம்பிற்கு 46% மட்டுமே வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications