ஆச்சரியம்! வடகொரியாவுக்குள் அத்துமீறிய அமெரிக்க ராணுவ வீரர்! ஓராண்டு கழித்து பத்திரமாக விடுவிப்பு
பியாங்யாங்: பல சர்வாதிகார நடவடிக்கைகளுக்காக பெயர் பெற்றதாக சொல்லப்படும் வடகொரியாவில், கடந்த ஆண்டு அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் நுழைந்துவிட்டார். இந்நிலையில் ஓராண்டு கழித்து அவரை வடகொரியா விடுவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவுக்கு வடகொரியா ஒரு தகவலை அனுப்பியது. வழக்கமாக இந்த நாடுகளுக்கு இடையில் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறுவது கிடையாது. இப்படி இருக்கையில், வடகொரியாவின் மெசேஜ் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இரண்டு வரி கொண்ட அந்த தகவலில், "உங்கள் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், எல்லையில் அத்துமீறி நுழைந்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சர்வாதிகார, ஈவு இரக்கமற்ற நடவடிக்கைக்கு பெயர் பெற்றதாக மேற்கு ஊடகங்களால் சித்தரிக்கப்படும், கிம் ஜாங் உன் ஆட்சிப்பகுதியில் அமெரிக்க வீரர் நுழைந்துவிட்டார் என்பது அன்றைய தேதிகளில் தலைப்பு செய்தியானது.
எதிரி நாட்டின் குடிமகன் அத்துமீறி எல்லையில் நுழைந்துவிட்டாலே ஏராளமான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். இப்படி இருக்கையில் ராணுவ வீரர் நுழைந்துவிட்டால்? இது போன்ற சம்பவங்களின்போது அத்துமீறியவர்களை விசாரிக்க சில வழிமுறைகள் பின்பற்றப்படும்.
முதலில் அத்துமீறியவரின் அடையாளம், உள்ளே நுழைந்ததற்கான நோக்கம், ராணுவத்தில் எந்த யூனிட்டில் பணியாற்றுகிறார்? என்பது போன்ற அடிப்படை கேள்விகள் கேட்கப்படும். பின்னர் அவர் ஏதேனும் ஆபத்தான ஆயுதங்களை கொண்டுவந்தாரா? என்பதும் விசாரிக்கப்படும். இதன் பின்னர்தான் விரிவான விசாரணை தொடங்கும்.
இராணுவ உத்திகள் மற்றும் செயல்பாடுகள், படைகளின் நடமாட்டம் பற்றிய தகவல்கள், உளவுத்துறை செயல்பாடுகள், கைதானவர் நாட்டின் திட்டங்கள் அல்லது நோக்கங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படும். இறுதியாக சில உளவியல் சோதனைகளும் நடைபெறும். அதன் பின்னர் கைது செய்யப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு, இரு நாட்டுக்கு இடையில் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
வடகொரியா அரசும் மேற்குறிப்பிட்ட நடைமுறையையே பின்பற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது கடந்த ஜூலை மாதம் அமெரிக்க ராணுவத்தின் பிரைவேட் செகண்ட் க்ளாஸ் படைப்பிரிவைச் சேர்ந்த டிராவிஸ் கிங் என்பவர் வடகொரியா எல்லையை தாண்டியிருந்தார். மேற்குறிப்பிட்ட நடைமுறையின் கீழ் டிராவிஸ் கிங்கை ஓராண்டு கைது செய்து வைத்திருந்த வடகொரியா தற்போது அவரை விடுவித்திருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, "வடகொரியா முடிந்தவரை எங்கள் ராணுவ வீரரிடமிருந்து அனைத்து தகவல்களையும் கறந்திருக்கும்" என்று கூறியுள்ளது.
சர்வாதிகார நாடாக வடகொரியா சித்தரிக்கப்பட்டு வரும் நிலையில், வடகொரியாவிலிருந்து அமெரிக்க ராணுவ வீரர் பத்திரமாக விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவனம் பெற்ற சம்பவமாக மாறியுள்ளது.
-
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications