அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் மீண்டும் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி; 13 பேர் படுகாயம்
டென்னிசி: அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் புளோரிடா மாகாணத்தில் அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது,

புளோரிடா மாகாணத்தின் போல்க் கவுன்டி பகுதியில் ஒரு வீட்டுக்குள் நுழைந்த மாஜி ராணுவ வீரர் பிரையன் ரைலி, கண் மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 மாத கைக் குழந்தையும் அதன் பெற்றோர்களும் கொல்லப்பட்டனர்..
மேலும் பக்கத்து வீட்டில் இருந்த 62 வயதான பெண்மணியையும் அந்த நபர் சுட்டுக் கொன்றார். குண்டு துளைக்காத கவச உடை அணிந்திருந்த மாஜி ராணுவ வீரர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் காயமடைந்தார். பின்னர், துப்பாக்கியை கீழே போட்டு விட்டு, காவல் துறையினரிடம் சரணடைந்தார் அந்த நபர்.
அதேபோல் வர்ஜீனியா பகுதியில் ஹெரிட்டேஜ் என்னும் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 19 வயது இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவருக்கு முகத்திலும் மாணவி ஒருவருக்கு காலின் கீழ் பகுதியிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டிருந்தன.
இந்த நிலையில் டென்னிசி மாகாணத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்துள்ளது. டென்னிசி மாகாணத்தில் ஒரு சூப்பர் மார்கெட் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.
Recommended Video
இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கண்மூடித்தமான துப்பாக்கிச் சூட்டினால் படுகாயமடைந்த சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
-
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications