நைஸாக சீனாவுக்குள் அத்துமீறி நுழைந்த.. 2 அமெரிக்க விமானங்கள்.. பீஜிங்கில் பதட்டம்!
பீஜிங்: சீனாவில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டு இருந்த பகுதியில் அமெரிக்காவின் இரண்டு உளவு விமானங்கள் அத்துமீறி பறந்ததாக அந்த நாடு குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வு குயின் விடுத்திருக்கும் அறிக்கையில், ''பீஜிங்கில் ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது, அமெரிக்க உளவு விமானங்கள் ஊடுருவின. இது ராணுவத்தினரின் பயிற்சி மற்றும் அன்றாட செயல்களை மிகவும் பாதித்துள்ளது. சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான கடல் பாதுகாப்பு சட்ட புரிந்துணர்வை அமெரிக்கா அத்துமீறி இருக்கிறது. சர்வதேச சட்டத்தையும் உடன்பாட்டையும் மீறி இருக்கிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தவறான வழிகாட்டுதல் மற்றும் விபத்துக்களுக்கு காரணமாக அமையலாம். செவ்வாய் கிழமை இரண்டு பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது இந்த சம்பவம் நடந்தது'' என்று தெரிவித்துள்ளது.
ஆனால், சீனாவின் புகாரை அமெரிக்காவின் பசிபிக் ராணுவப் படை மறுத்துள்ளது. அமெரிக்காவின் பசிபிக் ராணுவப் படை அளித்திருந்த விளக்கத்தில், ''யு 2 விமானம் பறந்தது உண்மைதான். ஆனால், அதுமீறலில் ஈடுபடவில்லை. சர்வதேச சட்டத்தின்படி ஒப்புக் கொள்ளப்பட்ட இந்தோ-பசிபிக் பகுதியில்தான் விமானம் பறந்தது. சர்வதேச சட்டம் அனுமதிக்கும் எந்தப் பகுதியிலும் பறப்பதற்கு அனுமதி தேவையில்லை'' என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பசிபிக் கமாண்டரும் சீனாவின் புகாரை மறுத்துள்ளார். அமெரிக்க உளவு விமானங்கள் மிகவும் அதிநவீனம் வாய்ந்தவை. சீனாவின் எல்லைக்குள் சென்று மோப்பம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
யு 2 ரக உளவு விமானங்கள் மிகவும் பழமையானது. 1950ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியனுடன் ஏற்பட்டு இருந்த பனிப்போரின்போது அந்த நாட்டின் ராணுவத்தை உளவு பார்க்க அமெரிக்க பயன்படுத்தி இருந்தது. மிகவும் தொலைவில் இருந்து கண்காணிக்கும் திறன் வாய்ந்தது இந்த உளவு விமானம். பசிபிக் பகுதியில் அமெரிக்கா தனது சொந்த ராணுவ பலத்தை பயன்படுத்தி வருகிறது.
சீனா சமீபத்தில் கடலுக்குள் ராணுவப் பயிற்சிகளை அதிகரித்து வருகிறது. பசிபிக் கடல் பகுதியில் பயிற்சி மேற்கொண்டு இருந்த நிலையில் யெல்லோ சீ எனப்படும் மஞ்சள் கடலிலும் பயிற்சியை முடித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications