திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு!
இஸ்லாமாபாத்: மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் இன்று தொடங்குகிறது. இதற்கிடையே பேச்சுவார்த்தைக்காகப் பாகிஸ்தான் சென்ற அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் விமானத்தைப் பாகிஸ்தான் விமானப்படை போர் விமானங்கள் சூழ்ந்துள்ளது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்!
வளைகுடாவில் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்தது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்த இந்த மோதல் இப்போது தான் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்பும் 15 நாட்களுக்கு தாக்குதல் வேண்டாம் என முடிவு செய்துள்ளது. மேலும், நிரந்தர போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்துள்ளது.

பேச்சுவார்த்தை
இந்தச் சூழலில் தான் போரை நிரந்தரமாக முடிவு கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் இந்த பேச்சுவார்த்தை நேற்று வெள்ளிக்கிழமை நடைபெறும் எனச் சொல்லப்பட்ட நிலையில், பிறகு அது இன்று சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கச் சார்பில் துணை அதிபர் வேன்ஸ், ஈரான் சார்பில் உயர் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
1979ம் ஆண்டு நடந்த ஈரானியப் புரட்சிக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் நேரடியாகச் சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறையாகும். இதற்கிடையே அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் பயணித்த 'போயிங் சி-32ஏ' (Boeing C-32A) விமானம் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்தவுடன், பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான ஐந்து **எஃப்-16 (F-16)** போர் விமானங்கள் அதைச் சூழ்ந்து கொண்டன.
சூழ்ந்த போர் விமானங்கள்
எது அமெரிக்கத் துணை அதிபர் விமானத்தைச் சூழ்ந்துவிட்டதா.. இதனால் எதாவது பதற்றம் ஏற்படுமா என நினைக்க வேண்டாம். அமெரிக்க துணை அதிபருக்கு மரியாதை கொடுக்கவும் அவரது விமானத்தைப் பாதுகாப்பாக அழைத்து வரவுமே இந்த விமானங்கள் சூழ்ந்தன. அதனைப் பாதுகாப்பாகச் சூழ்ந்து எஸ்கார்ட் செய்து அழைத்து வந்தன. இஸ்லாமாபாத் அருகே உள்ள நூர் கான் விமான தளத்தில் தரையிறங்கிய அமெரிக்க டீமில், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ஈரான்
ஈரான் சார்பில் அந்நாட்டின் நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்குகின்றனர். இருப்பினும், அமெரிக்கா மீதான நம்பிக்கையின்மை இன்னும் நீடிப்பதாக ஈரான் சபாநாயகர் காலிபாப் வெளிப்படையாகவே கூறிவிட்டார். அவர் மேலும், "எங்களுக்கு நல்ல எண்ணம் இருக்கிறது, ஆனால் அமெரிக்கர்களை நாங்கள் நம்பவில்லை. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அனுபவம் எப்போதும் தோல்வியிலும், மீறப்பட்ட வாக்குறுதிகளிலுமே முடிந்திருக்கிறது" என அவர் வெளிப்படையாகவே சாடியுள்ளார்.
How dangerous is it to be in Pakistan for an American leader?
— श्रवण बिश्नोई (किसान/ Hindus) (@SKBishnoi29Rule) April 11, 2026
American delegation aircraft to the Islamabad Talks was being escorted by five Pakistan Air Force F-16s.
Not just a symbolic respect gesture. Reports emerge Vice president JD Vance and other Americans were hesitant… pic.twitter.com/ktjXfvsKIC
சுமுகமாக நடக்குமா!
பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளைக் களைவது பெரும் சவாலாக இருக்கும் எனத் தெரிகிறது. அமெரிக்கா இந்த விவகாரத்தில் 15 அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளது. ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் மற்றும் அதன் ராணுவ வலிமைக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
மறுபுறம் ஈரானின் 10 அம்சத் திட்டத்தை முன்வைக்கிறது.. தாக்குதல்களுக்கு அமெரிக்காவிடம் இருந்து நஷ்டஈடு கோருவதுடன், ஹார்முஸ் ஜலசந்தி மீது ஈரானுக்கே இறையாண்மை இருப்பதாகவும் அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என ஈரான் முக்கிய நிபந்தனையை வலியுறுத்துகிறது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தாலும், லெபனான் - இஸ்ரேல் இடையிலான மோதல்கள் இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. அடுத்த வாரம் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில், இஸ்லாமாபாத் சந்திப்பு அதற்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என தெரிகிறது.
-
போதையில் பாகிஸ்தான் அமைச்சர் செய்த காரியம்? மிக பெரிய போர் வெடித்திருக்கும்.. அலட்சியத்தின் உச்சம் -
ஹர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்த புதிய யுக்தி! வியூகத்தை மாற்றிய ஈரான்! சுப்ரீம் லீடர் கொடுத்த மெசேஜ்! -
“பிளான் எங்கே..?” ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க நேட்டோ நாடுகளை நச்சரிக்கும் டிரம்ப்! -
ஈரான் ஆடிய ஆட்டம்.. சவுதி அரேபியாவின் மோசமான நிலை.. போர் முடிந்த பின் வெளியான உண்மை! -
Trump: எல்லாரும் ரெடியா இருங்க.. அடுத்த அட்டாக் பலமா இருக்கணும்.. ஈரானுக்கு எதிராக புது அறிவிப்பு! -
வளைகுடா நாடுகளில் அமைதி.. இந்தியர்களுக்கு பெரிய நிம்மதி! ஈரான் எடுத்த நடவடிக்கை! -
10 நிமிடத்தில் 100 ஏவுகணைகள்! அடங்க மறுக்கும் இஸ்ரேல்.. லெபனான் மீது கொடூர தாக்குதல்! மீண்டும் போர்? -
பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் பல்பு கொடுக்கும் ஈரான்.. ஒரே கண்டிஷன் - டிரம்ப்-க்கு அடுத்த செக் -
ஈரான் போரால் ஐரோப்பாவுக்கு புது சிக்கல்.. 3 வாரம் தான் கெடு! -
மெல்ல குறையும் பதற்றம்.. சவுதியில் திரும்பும் அமைதி! ஈரான் முன்னெடுத்த முக்கிய மூவ்! -
ஈரான் விவகாரத்தில் மத்தியஸ்தம்.. பாகிஸ்தானை நம்ப முடியாது! ஓபனாக சொன்ன இஸ்ரேல் -
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் நெதன்யாகு.. லெபனானை தொடர்ந்து தாக்குவோம் என இஸ்ரேல் திட்டவட்டம்












Click it and Unblock the Notifications