பாகிஸ்தானுடன் இந்தியா போருக்கு போகக்கூடாது.. திருமாவளவன் திட்டவட்டம்
திருச்சி: பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இருக்கிறது எனில், அதை உலக நாடுகள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டுமே தவிர, அந்நாட்டுடன் போருக்கு போகக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது, "காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மனிதாபிமானமற்ற கொடூரமான செயல். பயங்கரவாதத்தின் கோழைத்தனம். அப்பாவி பொதுமக்களை மிக கேவலமான முறையில் படுகொலை செய்திருக்கிறார்கள். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது.

இந்த பயங்கரமான நடவடிக்கைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். அனைத்து இந்தியர்களும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது. சாதி, மதம் வேறுபாடு இல்லாமல் இந்தியர் என்கிற ஒரு உணர்வில் இணைந்து இந்த பயங்கரவாதத்தை எதிர்ப்போம்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று சொல்லியிருந்தோம். இதற்கு எங்களுக்கு எந்த அரசியல் ஆதாயமும் கிடையாது. இது எங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடு. நாங்கள் சொன்ன உடனேயே அமித் ஷா பதவி விலகி விடப்போவதில்லை. அதேபோல பாஜக அரசுக்கு நாங்கள் விடுத்த வேண்டுகோள் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தப் போவதில்லை. ஆகவே இப்போதும் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் இது எங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடு.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டால், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடைந்து விடும். அங்கு சுற்றுலா மேம்பட்டுவிடும். யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம். தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றெல்லாம் பாஜக தலைமையிலான மத்திய அரசு சொல்லிவந்தது. மத்திய அரசு சொன்னதை போலவே 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது.
இப்பொழுது மக்கள் தாராளமாக அங்கு சுற்றுலா செல்லலாம் என்று மத்திய அரசு கூறியிருந்தது. மத்திய அரசின் பேச்சை நம்பி மக்கள் அங்கு சுற்றுலா சென்றார்கள். அப்படி நம்பி சென்றவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
சிறப்பு சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கிவிட்டால், யார் வேண்டுமானாலும் இங்கே வருவீர்கள், தொழில் தொடங்குவீர்கள், இங்கு உள்ள இயற்கை வளங்களை சுரண்டுவீர்கள், இதையெல்லாம் எங்களால் அனுமதிக்க முடியாது என்பதற்கான எச்சரிக்கைதான் இந்த தாக்குதல்.
அதேபோல இந்த தாக்குதல் சம்பவத்தில், தாக்குதல் நடத்தியவர்கள் பொதுமக்களை இஸ்லாமியர்களா? என்று பரிசோதித்து ஆடையை கழற்றி பார்த்து அதன் பின்னர் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. அது உண்மை இல்லை. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படிப் பார்த்தால் அங்கு குதிரை சவாரி தொழில் செய்து கொண்டிருந்த ஒரு இஸ்லாமிய சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஆகவே இப்படியான செய்திகளுக்கு ஆதாரம் கிடையாது.
காஷ்மீரில் நடந்த தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையேயான போராக மாறிவிடக்கூடாது. நாம் நம்முடைய வலிமையை வேறு நாட்டிடம் நிரூபித்து காட்டக்கூடாது. இந்த போர் உலக நாடுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒருவேளை பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணைபோகுமேயானால் அதை உலக நாடுகள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். இப்படி செய்து அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அதைவிட்டு போருக்கு போவது என்பது தேவையில்லாதது" என்று கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications