பிரான்சில் அடங்காத வன்முறை.. கையை பிசையும் மேக்ரான்.. பெற்றோர்கள் ஹெல்ப் பண்ணுங்க என கோரிக்கை
வாஷிங்டன்: பிரான்ஸ் நாட்டில் சிறுவன் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் பலியானதால் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை மூன்றாவது நாளாக பற்றி எரிகிறது. இதனால், வன்முறையை கட்டுப்படுத்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் பெற்றோர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகர் அருகே நான்டர் எனும் இடம் உள்ளது. இங்கு அல்ஜீரிய மற்றும் மொராக்கோ வம்சாவளியை சேர்ந்த 17 வயது நிரம்பிய நேல் என்ற சிறுவன் சென்றான். அப்போது அவன் போக்குவரத்து விதிகளை மீறியதாக போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சிறுவன் நேல் பலியானான். இந்த சம்பவம் பிரான்ஸ் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

போலீசாருக்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். நாட்டின் பல இடங்களில் மக்கள் போராடட்த்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் வன்முறையாக வெடித்தது. பள்ளிக்கூடங்கள், போலீஸ் ஸ்டேஷன்கள், போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. பொதுமக்கள், போலீசார், பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பிரான்சில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தனது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தீவிர ஆலோசனை நடத்திய நிலையில் மக்கள் அமைதி காக்க வேண்டும் வலியுறுத்தினார். எனினும் வன்முறை மட்டும் கட்டுக்குள் வந்த பாடில்லை. சுமார் 45 ஆயிரம் போலீசார் அங்கு தீவிர ரோந்த்யு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறையில் 100க்கும் அதிகமான போலீசார் காயமடைந்துள்ளனர்.
மேலும் 800 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாரீஸ் மற்றும் அதனை சுற்றிய முக்கிய இடங்களில் போலீசார், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் வார இறுதி நாட்களில் வழக்கமாக நடைபெறும் கச்சேரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தையும் நிறுத்தப்பட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபடுவர்கள் பெரும்பாலும் இளம் வயதினர் என்றும் அவர்களை வீதிக்கு வரவிடாமல் வீட்டில் வைத்திருப்பது பெற்றோர்களின் பொறுப்பு எனவும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டும் இன்றி சமூக வலைத்தளங்கள் மூலமாக திட்டமிட்டு வன்முறைகள் நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள மேக்ரான், வீடியோ கேம்கள் வன்முறைக்கும் பெரும் பங்கு வகிப்பதாகம் சாடியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications