கதற விடும் கொரோனா.. அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள், ஜெர்மனியில் வெடித்த போராட்டம்.. 600 பேர் கைது
ஜெர்மனியில் பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்
பெர்லின்: ஜெர்மனியில் தொற்று பாதிப்பு அதிகமாகி கொண்டே வருவதால், அந்த நாடு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் தொற்று பீடித்து வருகிறது.. அந்த வகையில், பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்திலும் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதையடுத்து, அந்த நாட்டில் மறுபடியும் லாக்டவுன் கொண்டுவரப்பட்டது..
இதனால், ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுக்கு விமான போக்குவரத்தையும் நிறுத்தி கொண்டன. அதில் ஜெர்மனியும் ஒன்றாகும்..

தீவிரம்
காரணம், கடந்த வருடமே இங்கு கொரோனா பரவலின் தீவிரம் அதிகமாக இருந்தது.. இந்த வருடமும் ஜெர்மனியை விட்டுவைக்கவில்லை.. இதனால், தொற்றை கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.. ஆனாலும் பலனில்லை.. இப்போது, உலக அளவில் கொரோனா தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் லிஸ்ட்டில் ஜெர்மனி 13-வது இடத்தில் உள்ளது. இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு, 3,779,778 பேர் தொற்றுக்கு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்..

தடுப்பூசி
92,183 பேர் உயிரிழந்துள்ளனர்.. 3,656,300 பேர் தொற்றில் இருந்து இதுவரை மீண்டுள்ளனர்.. இப்போதைக்கு 31,295 பேர் வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்... இதனால், கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது... அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. ஆனால், இப்படி அடுத்தடுத்த கட்டுப்பாடுகளை விதிப்பது, தங்களது இயல்பு வாழ்க்கையின் சுதந்திரத்தில் அத்துமீறுவதாக அந்த நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.. அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்திலும் குதித்தனர்.

மறுப்பு
கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் விரைந்து வந்து, அவர்களை கலைந்து போகும்படி செய்தனர்.. எனினும், ஒருசிலர் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவிக்கவும், போராட்டம் நடத்தியவர்களில் 600 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்... இந்த தள்ளுமுள்ளுவில் 10 பேர் காயமடைந்தனர். இதனால் ஜெர்மனியில் பதட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
Recommended Video

போராட்டம்
இப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு பிரான்ஸ் தலைநகர் பாரீசிலும் போராட்டம் வெடித்தது.. தடுப்பூசியை கட்டாயம் அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்நாடு கட்டாயப்படுத்தவும், அரசின் கட்டுப்பாடுகள் தங்களின் சுதந்திரத்தை பறிப்பதாக சொல்லி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் தெருவில் இறங்கி போராடவே ஆரம்பித்துவிட்டனர்.. அவர்களை தடுக்க வந்த போலீஸ்கார்கள் 12 பேரை அடித்து தாக்கிய சம்பவம் பாரீசில் நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications