நடுவானில்.. பாட்டிலில் சிறுநீர் கழித்த விமான பயணிகள்! எல்லாம் இதனால்தான்!
கான்பெரா: இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த பயணிகள் விமானத்தில், நடுவானில் பாட்டிலில் பயணிகள் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக, ஏர்லைன்ஸ் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.
இந்தோனேசியாவின் பாலியிலிருந்து வெர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 737 MAX 8 ரக பயணிகள் விமானம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கி நேற்று புறப்பட்டது.

பொதுவாக விமானங்கள் புறப்படுவதற்கு முன்னர் அனைத்தும் செக் செய்யப்படும். கழிவறை சுத்தப்படுத்தப்பட்டு இருக்கிறதா? கழிவறையின் டேங்க் காலியாக இருக்கிறதா? என்பது உட்பட பரிசோதிக்கப்படும். பிரிஸ்பேன் புறப்பட்ட விமானத்திலும் இது சோதிக்கப்பட்டிருக்கிறது. சோதனையில் கழிப்பறை பைப்புகளில் அடைப்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆனாலும் அதை சரி செய்ய பணியாளர்கள் இல்லை. எனவே, விமானம் அப்படியே திட்டமிட்டபடி டேக் ஆஃப் ஆகியிருக்கிறது.
பாலியிலிருந்து பிரஸ்பேனுக்கு பயணம் நேரம் மொத்தம் 6 மணி நேரம். 4,500 கி.மீ தொலைவுக்கு இந்திய பெருங்கடலை கடந்து போக வேண்டும். ஜன்னல் வழியாக பார்க்கும் இடமெல்லாம் வெறும் தண்ணீர் மட்டும்தான் இருக்கும். நீல நிறத்தில் கடலை பார்க்கும்போது நமக்கு இரண்டு விஷயங்கள் தோன்றும். ஒன்று தண்ணீர் தாகம் எடுக்கும். இரண்டாவது சிறுநீர் கழிக்க தோன்றும். இந்த விமானத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. பயணிகளுக்கு தாகம் எடுத்திருக்கிறது. தண்ணீரை குடித்திருக்கிறார்கள்.
கொஞ்ச நேரம் கழித்து அவர்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருந்திருக்கிறது. எனவே கழிவறைக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு போன பின்னர்தான் தெரிந்திருக்கிறது கழிவறை பைப்பில் அடைப்பு இருப்பதால் அது வேலை செய்யவில்லை என்று. 6 மணி நேர பயணித்தில் முதல் மூன்று மணி நேரம் தாக்கு பிடித்த பயணிகளால் அடுத்த மூன்று மணி நேரம் தாக்குபிடிக்க முடியவில்லை. நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைய தொடங்கியிருக்கிறது. விமானத்தை பாதியில் வேறு எங்கும் தரையிறக்க முடியாது. ஏனெனில் விமானம் கடலுக்கு மேல் பறந்துக்கொண்டிருக்கிறது.
இதனையடுத்து பாட்டிலில் சிறுநீர் கழித்துக்கொள்ளுமாறு விமான பணியாளர்கள் கூற, அவசரத்தை அடக்க முடியாத பயணிகள் அதையே செய்திருக்கின்றனர். அவசரத்தில் அண்டாவில் கைவிட்டாலே சரியாக நுழையாது, இதில் பாட்டிலில் எப்படி சரியாக சிறுநீர் கழிக்க முடியும்? எனவே விமானத்தின் தரையில் சிறுநீர் சிந்தி, விமானம் முழுவதும் துர்நாற்றம் வீசியிருக்கிறது. மூன்று மணி நேரமாக மூக்கை மூடிக்கொண்டு பயணிகள் ஒரு வழியாக பிரிஸ்பேன் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
ஆண்கள் கூட ஒரு பக்கம் அட்ஜெஸ்ட் செய்துக்கொண்டார்கள். ஆனால் பெண்களால் முடியவில்லை. குறிப்பாக வயதான பெண்கள் ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். எப்போடா விமானம் தரையிறங்கும் பல்லை கடித்துக்கொண்டு காத்திருந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது. போதுமான பணியாளர்கள் இல்லாததால்தான் இதுபோன்று நடந்தது என்றும், சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், பயண டிக்கெட்டுக்கான தொகையை திருப்பி கொடுப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications