உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த குழுவை அனுப்ப விளாடிமிர் புடின் தயார் - ரஷ்ய தூதரகம்
உயர்மட்ட குழுவை மின்ஸ்க் நகருக்கு அனுப்ப ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தயாராக உள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.
மாஸ்கோ: உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு குழுவை அனுப்ப ரஷ்யா தயார், இந்த பேச்சுவார்த்தை பெலேராஸ் நாட்டு தலைநகர் மின்ஸ்க் இல் நகரில் நடக்க வேண்டும் என்று புடின் அறிவித்ததாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா இரண்டாவது நாளாக ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 800க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

இந்நிலையில் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு குழுவை அனுப்ப ரஷ்யா தயார், இந்த பேச்சுவார்த்தை பெலேராஸ் நாட்டு தலைநகர் மின்ஸ்க் இல் நகரில் நடக்க வேண்டும் என்று புடின் அறிவித்ததாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் திடீர் தாக்குதல் நடத்தி உலக நாடுகளுக்கு ரஷ்யா அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்றிலிருந்து ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியிருக்கிறது. போர் என்று கூறும் அளவுக்கு மிகப்பெரிய அளவிலான தாக்குதல்கள் இன்னும் தொடுக்கப்படவில்லை. உக்ரைனில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இருப்பதால் உலக நாடுகள், இந்த விவகாரத்தை கவனமாக கையாண்டு வருகின்றன.
அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்டவைகளை உறுப்பு நாடாக கொண்டுள்ள நேட்டோ அமைப்புடன் உக்ரைன் சேர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.
கீவின் மேல் வான் தாக்குதல் சைரன்கள் அலறியவண்ணம் இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்திகள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி ரஷ்ய விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டு கட்டிடம் ஒன்றினுள் புகுந்ததாக கூறப்படுகிறது. தலைநகரின் சுற்றுப்புறப்பகுதியில் ரஷ்யப் படைகள் ஊடுருவியுள்ளன, அடுத்து தலைநகருக்குள்ளும் ஊடுருவும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பெரிய நகரங்களில் வெடிச்சத்தங்களும் துப்பாக்கிச் சூடு சத்தமும் அலற சுமார் 1 லட்சம் பேர் வீடு வாசலை விட்டு வெளியேறி விட்டனர். செர்னோபில் அணு நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றிவிட்டன.
அமெரிக்காவின் கைப்பாவையாக இருப்பதாக புதின் கருதும் உக்ரைனைக் கைப்பற்றி அரசாங்கத்தை கவிழ்ப்பதை ரஷ்யா நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமெரிக்க மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்நிலையில் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு குழுவை அனுப்ப ரஷ்யா தயார், இந்த பேச்சுவார்த்தை பெலேராஸ் நாட்டு தலைநகர் மின்ஸ்க் இல் நகரில் நடக்க வேண்டும் என்று புடின் அறிவித்ததாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications