4,000 டிகிரி வெப்பம் வரும்..ரஷ்யாவின் புதிய ஏவுகணையின் மறுபக்கம்! அமெரிக்காவை அலறவிடும் புதின்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உலகிலேயே வேறு யாரிடமும் அந்த ஏவுகணை இல்லை என ஏற்கனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியிருந்தார். தற்போது அந்த ஏவுகணை குறித்த புதிய புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஒரேஷ்னிக் ஏவுகணை விழும் இடத்தில் சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் வெப்பத்தை போல் 4 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பம் உருவாகும் என்று புதின் எச்சரிக்கை செய்துள்ளார். இந்த வெப்பத்தில் இரும்பு உருகுவதோடு, கான்கிரீட்டுகள் ஆவியாகிவிடும் என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அச்சமடைந்துள்ளன.

உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி பிரிட்டன் வழங்கிய ஏவுகணைகளை வைத்து ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு பதிலடியாக உக்ரைன் மீது ரஷ்யாவும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

ukraine russia vladimir putin

உக்ரைனில் உள்ள டினிப்ரோ நகரின் மீது ரஷ்யா புதிய வகை ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணையின் பெயர் Oreshnik. இது ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகும். தற்போது இந்த ஏவுகணை சோதனையை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த ஏவுகணை என்பது உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லை. ரஷ்யாவில் தான் உள்ளது என்று விளாடிமிர் புதின் ஏற்கனவே கூறியுள்ளார். அதோடு இந்த ஏ ஒரெஷ்னிக் ஏவுகணை ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லும். இந்த வேகம்என்பது மாக் 10 என இது அழைக்கப்படுகிறது.மணிக்கு 12,300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது இந்த ஏவுகணை. அதாவது வினாடிக்கு 3.40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.

இந்த ஏவுகணை மாக் 10 வேகத்தில் செல்வதால் இடைமறித்து தாக்குவது என்பது கடினமானதாகும். அதுமட்டுமின்றி இந்த ஏவுகணையால் அதிகபட்சம் 5 ஆயிரம் கிலோமீட்டர்(3,100 மைல்) ரேஞ்ச் வரை தாக்குதல் நடத்த முடியும். அதோடு ஒரெஷ்னிக் ஏவுகணையால் அணு ஆயுத தாக்குதலையும் மேற்கொள்ள முடியும். ஒரு ஏவுகணையில் 6 வெடிப்பொருள் அல்லது அணு ஆயுதம் நிரப்பும் warheads இருக்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது.

இது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளை நடுங்க வைத்துள்ள நிலையில் தற்போது இன்னொரு திடுக்கிடும் விஷயத்தை விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தான் தற்போது அனைத்து உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ரஷ்யா ஏவிய ஒரெஷ்னிக் ஏவுகணையின் வேகம் ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு அதிகம். மணிக்கு 12,348 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து சென்று தாக்கும். ஒரு நொடியில் 3 கிலோ மீட்டர் சென்று விடும். இந்த ஏவுகணை தாக்கும் போது 4,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை கக்கும். சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையே 5000 முதல் 6000 டிகிரி செல்சியஸ் தான் என்று நினைக்கிறேன். எனவே ஒரெஷ்னிக் ஏவுகணை தாக்கும் போது, அந்த இடம் முற்றிலும் தகர்க்கப்பட்டு குப்பையாகி விடும்.

அதே போல் ஒரெஷ்னிக் ஏவுகணை அணு ஆயுதம் சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. ஆனால் தற்போது பயன்படுத்தப்பட்ட ஒரேஷ்னிக் ஏவுகணையில் நாங்கள் அணு ஆயுதம் வைத்து அனுப்பவில்லை. இருப்பினும், ஒரேஷ்னிக் ஏவுகணை ஏற்கனவே தாக்கிய இடத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதம் கொண்டு தாக்கியதற்கு சமமான விளைவுகள் ஏற்படும். போரை முடிவுக்கு கொண்டு வர இப்போதும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அதே நேரம் ஒன்றை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். எங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக எந்த எல்லைக்கும் போகவும் தயங்கமாட்டோம்'' என்று எச்சரித்துள்ளார்.

விளாடிமிர் புதினின் இந்த தகவலை உக்ரைன் மற்றும் உக்ரைனுக்கு உதவும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை மனதில் வைத்து கூறியுள்ளார். மேலும் புதின் கூறியது போல் இந்த ஒரெஷ்னிக் ஏவுகணை என்பது 4 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை கக்கும் என்பது உறுதி செய்யப்பட்டால் தாக்குதல் நடத்தப்படும் இடத்தில் இருக்கும் இரும்பு உருகிவிடும். அதேபால் காண்கிரீட் கொண்டு கட்டப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் வினாடியில் சாம்பலாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. விளாடிமிர் புதினின் இந்த பேட்டி தற்போது அமெரிக்கா, பிரிட்டனை அலறவைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+