கலக்கும் 'வள்ளுவர் சூட்கேஸ்'.. ஓட்டுப் போட்டு "செலக்ட்" பண்ணுங்கள் தமிழர்களே!
வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபலமான சேம்சொனைட் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள வித்தியாசமான சூட்கேஸுக்கான போட்டியில் ஒரு வித்தியாசமான சூட்கேஸ் கலந்து கொண்டுள்ளது.
தெய்வப் புலவர் திருவள்ளுவரின் படத்துடன் கூடிய சூட்கேஸ் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளது.
இந்த சூட்கேஸை வடிவமைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது சிறப்பம்சமாகும்.

அமெரிக்க நிறுவனம்
அமேரிக்காவை தலைமையிடமாக இயங்கும் சேம்சொனைட் நிறுவனம் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் சாமான்களை கொண்டு செல்லும் பயணப்பெட்டிகளைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் உலக அளவில் புதிய பயணபெட்டியை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்தியாவுக்கேற்ற பயணப்பெட்டி
இந்தியாவில் பயணப்பெட்டியை அறிமுகபடுத்தும் நோக்கில் இந்தியாவிற்கு ஏற்ற பயணப்பெட்டி வடிவமைப்பை அதன் வாடிக்கையாளர்கள் வடிவமைத்து அனுப்பும் போட்டியை இணையம் மூலமாக நடத்துகிறது.

வாக்களித்து தேர்ந்தெடுக்கிறது
இதில் சிறந்து அளவில் வடிவமைத்து பொதுமக்களால் வாக்களித்து முதலிடம் பெறும் வடிவமைப்பு உடன்கூடிய பயணபெட்டி இனி தயாரித்து விற்பனைக்கு வரும்.

சுரேந்திர குமார் வடிவமைத்த வள்ளுவர் சூட்கேஸ்
இந்த போட்டியில் தமிழகத்தை சார்ந்த சுரேந்திர குமார் என்பவர் தமிழர் அடையாளத்துடன் கூடிய இந்தியாவின் பண்பாட்டை எடுத்துரைக்கும் விதமாக ஓர் வடிவமைப்பை உருவாக்கியுள்ளார். திருவள்ளுவரையும் தமிழையும் முதன்மைபடுத்தும் விதமாக இந்த வடிவமைப்பு அமைந்துள்ளது.

தமிழர் அடையாளத்தை தேர்ந்தெடுப்போம்
பல தேசிய இனங்கள் சேர்ந்துதான் இந்தியா என்று செய்தியையும் இதன் மூலமாக கூறியுள்ளார் இவர். சுரேந்திர குமார் வடிவமைப்புக்கு நாம் வாக்களித்து தமிழர் அடையாளத்தை உலகநாடுகளுக்கு எடுத்துச் செல்லலாம்.

இங்கு போய் வாக்களிக்கலாம்
http://samsonitedesigner.com/in/design/456/ என்ற இணைப்பில் உள்ள பக்கத்திற்கு சென்று சுரேந்திர குமாருக்கு நீங்கள் முகநூல் மூலமாக மே மாதம் 15-ம் தேதி வரை வாக்களிக்கலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications