400 பேர் மரணம்.. 2000 பேர் படுகாயம்.. சிரியாவில் தொடரும் தாக்குதல்.. பூமியில் ஒரு நரகம்
சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 400 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
Recommended Video

டமாஸ்கஸ்: சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 400 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். ஆனால் உண்மையான எண்ணிக்கை என்ன என்ற கணக்கு இன்னும் வெளியாகவில்லை.
தற்போது சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது.
2012ம் ஆண்டில் இருந்தே இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது இது இறுதிக்கட்டத்தை அடைந்து இருக்கிறது.

ஒரே இடம்
தற்போது புரட்சி படையிடம் கவுட்டா என்று பகுதி மட்டுமே இருக்கிறது. இந்த பகுதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே இருக்கும் முக்கியமான இடம் ஆகும். இதை கைப்பற்றத்தான் தற்போது அரசு படை அங்கு வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.

உதவி
இந்த பிரச்சனை தீவிரம் ஆனது, இதில் ரஷ்யா கைகோர்த்த போதுதான். ரஷ்ய ராணுவம் சிரியா அரசுக்கு ஆதரவாக அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய வான்படை அங்கு மோசமான குண்டுகளை போட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

அதிகம்
முதல் நாள் முடிவில் மொத்தம் 85 பேர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது 5 நாள் முடிவில் 400 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள் என்று கணக்கு காட்டப்பட்டு இருக்கிறது. இதுவரை 2000 பேர் மோசமாக காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் பலரின் உடல் மீட்கப்படவில்லை.

பல நகரம்
அங்கு இருக்கும் 100க்கும் அதிகமான கிராமங்கள் மொத்தமாக அழிந்து போய் இருக்கிறது. 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அந்த பகுதியில் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். 27,000 குழந்தை இதில் இருக்கலாம் என்று இப்போது வரை கணிக்கப்பட்டு இருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications