ஆசியாவில் வெடிக்கும் போர்? ஆப்கன் - தஜிகிஸ்தான் எல்லையில் குவிக்கப்படும் ராணுவம்! என்ன பிரச்சனை
காபூல்: ஆசியாவில் அடுத்தடுத்து போர் மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. இந்தியா - பாகிஸ்தான் போர், தாய்லாந்து - கம்போடியா போர் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது ஆசியாவில் இரு முஸ்லிம் நாடுகளான ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் இடையே இடையே போர் பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தஜிகிஸ்தான் தனது எல்லையில் ராணுவத்தை குவித்து வருகிறது. இந்த இருநாடுகள் இடையே என்ன பிரச்சனை? திடீர் போர் பதற்றத்துக்கு என்ன காரணம்? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தான் அடிக்கடி போர்கள் நடந்து வரும். உள்நாட்டு போர், இருநாடுகள் இடையேயான மோதல் என்று போருக்கு பெயர் பெற்ற பிராந்தியம் மத்திய கிழக்காகும். இப்போதும் இஸ்ரேல் - காசா போர் அந்த பிராந்தியத்தில் தான் நடந்து வருகிறது. அதேபோல் இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இதுதவிர சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளிலும் கிளர்ச்சியாளர்களின் மோதல் தொடர்ந்து வருகிறது.

இப்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தை போல் ஆசியாவிலும் உள்ள நாடுகள் இடையேயும் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தான் நம் நாட்டுக்குமு் - பாகிஸ்தான் இடையேயான போர் முடிவுக்கு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து கடந்த வாரம் தொடங்கிய தாய்லாந்து - கம்போடியா இடையே நடந்த போர் மலேசியாவின் சமாதான பேச்சுவார்த்தையால் முற்றுப்பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தான் தற்போது ஆசியா கண்டத்தில் இன்னொரு இருநாடுகள் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே சண்டை போய் கொண்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ தொடங்கி உள்ளது. இதற்கு இருநாடுகள் இடையே நிலவி வரும் நீண்ட கால பிரச்சனை தான்.
அதாவது ஆப்கானிஸ்தானும், தஜிகிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. 1,300 கிலோமீட்டர் தூரத்துக்கு எல்லைகளை பகிர்ந்து வருகின்றன. இருநாடுகள் இடையே தொடர்ந்து பிரச்சனை இருந்து வருகிறது. குறிப்பாக 2021ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் இடையேயான பதற்றங்கள் அதிகரித்தன. இருநாடுகள் இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மக்களில் 30 சதவீதம் பேர் தாஜிக் வம்சாவளியை சேர்ந்தவர். அதாவது தஜிகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள். இதனால் தாலிபான்களின் ஆட்சியை அவர்கள் எதிர்த்து வருகின்றனர். இந்த எதிர்ப்பு குழுவை சேர்ந்த பல தலைவர்கள் தஜிகிஸ்தானில் உள்ளனர். இதுதொடர்பாக இருநாடுகள் இடையே பிரச்சனை உள்ளது. மேலும் தாலிபான்களின் ஆட்சியை இன்னும் தஜிகிஸ்தான் அங்கீகரிக்கவில்லை.
மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் தஜிகிஸ்தான் எல்லையில் நுழையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது தஜிகிஸ்தான் தனது எல்லையில் ராணுவ படைகளை குவித்து வருகிறது. கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பும் (Collective Security Treaty Organization or CSTO) ராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது. இந்த அமைப்பில் ரஷ்யா, கஜகஸ்தான், ஆர்மீனியா, கிர்கிஸ்தான் மற்றும் பெலாரஸ் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த அமைப்பில் உள்ள நாடுகளில் ரஷ்யா மட்டுமே ஆப்கானிஸ்தானின் தாலிபான் ஆட்சியை அங்கீகரித்துள்ளது. மற்ற நாடுகள் தாலிபான் ஆட்சியை இன்னும் அங்கீகரிக்கவில்லை. மேலும் இந்த அமைப்பில் உள்ள நாடுகளுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு சார்பில் உதவிகள் வழங்கப்படும். அந்த வகையில் தஜிகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையை பாதுகாக்கும் பணியில் உள்ள தஜிகிஸ்தான் ராணுவத்துக்கு இந்த அமைப்பு ஆயுதங்களை வழங்கி உள்ளது.
சமீபத்தில் நடந்த கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையில் தாலிபான்களால் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் அங்கு ராணுவ பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தஜிகிஸ்தான் சார்பில் இப்படி எல்லையில் ராணுவத்தை குவித்து வந்தாலும் கூட ஆப்கானிஸ்தான் மவுனம் காக்கிறது. தஜிகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் கூறியுள்ளனர். இருப்பினும் இருநாடுகள் இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சூழலில் ஆசியாவில் அடுத்த போர் வெடிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications