யாரும் எதிர்பார்க்காத திருப்பம்.. முடிவுக்கு வரும் போர்? 190 போர் கைதிகள் விடுவிப்பு! என்ன நடந்தது!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: மத்திய கிழக்கில் பதற்றம் தொடரும் நிலையில், இதற்கிடையே ரஷ்யா- உக்ரைன் மோதலில் மிக முக்கிய திருப்பம் நடந்துள்ளது. ரஷ்யா தான் சிறைபிடித்து வைத்திருந்த 95 உக்ரைன் வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. அதேபோல உக்ரைனும் தன்வசம் இருந்த 95 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது பதற்றம் நிலவுவது அனைவருக்கும் தெரியும். இஸ்ரேலைச் சுற்றிலும் அங்குப் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. நாளுக்கு நாள் இந்த நிலைமை மோசமாகி வருகிறது.

russia ukraine world

அதேநேரம் இந்த பதற்றத்திற்கு முன்பே ரஷ்யா உக்ரைன் இடையே மோதல் வெடித்து இருந்தது. கடந்த 2022ல் தொடங்கிய இந்த போர் தொடர்ந்தே வருகிறது. இதனால் இரு தரப்பிலும் இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

போர் கைதிகள் விடுவிப்பு: இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர பல உலக நாடுகள் முயன்று வருகின்றன. குறிப்பாக இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் செய்து வைக்கும் முயற்சியில் ஐக்கிய அமீரகம் ஈடுபட்டு இருந்தது. இந்த முயற்சிக்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. இதன் விளைவாக உக்ரைன் தன்வசம் இருந்த 95 ரஷ்ய வீரர்களை விடுவித்துள்ளது. அதேபோல ரஷ்யாவும் தனது வசம் இருந்த 95 உக்ரைன் வீரர்களை விடுவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு நிலவும் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் எனச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக ரஷ்யா ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பேச்சுவார்த்தையின் விளைவாக, உக்ரைன் வசம் இருந்த 95 ரஷ்யப் படைவீரர்கள் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளனர். அதேபோல 95 உக்ரைன் ராணுவக் கைதிகளும் உக்ரைன் வசம் ஒப்படைக்கப்பட்டனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மாக்சிம் புட்கேவிச்: உக்ரைனின் முக்கியமான மனித உரிமை ஆர்வலராகக் கருதப்படும் மாக்சிம் புட்கேவிச் என்பவரையும் ரஷ்யா விடுவித்துள்ளதாக ஜ்மீனா என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் இதை உக்ரைன் இன்னும் உறுதி செய்யவில்லை. இந்த மாக்சிம் புட்கேவிச்வுக்கு ரஷ்யர்கள் இருவரைக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு இருந்தது.

உக்ரைன் பகுதியில் ரேடியோ சேனலை நடத்தி வந்த மாக்சிம் புட்கேவிச், 2022ல் உக்ரைன் போர் தொடங்கிய நிலையில், உக்ரைன் ராணுவத்தில் இணைந்தார். அவர் மார்ச் 2023இல் ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் ரஷ்யர்களைக் காயப்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தை: ரஷ்யா உக்ரைன் இடையே தொடங்கிய மோதல் 2.5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் நிலையில், இப்போது இந்த கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளது. ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, துருக்கி நடத்திய பேச்சுவார்த்தைகளே இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

முடிவுக்கு வரும் போர்: முன்னதாக கடந்த செப். மாதம் இதேபோல ஐக்கிய அமீரகம் முன்னெடுத்த பேச்சுவார்த்தை காரணமாக மொத்தம் 206 போர்க் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இப்போது ஒரே மாதத்தில் மீண்டும் 190 போர் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சில வார இடைவெளியில் அடுத்தடுத்து போர் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+