ஏன் இந்த 'ஷட்டவுன்'.. அமெரிக்கர்கள் புரிந்து கொள்ள வேண்டும்... ஒபாமா பேச்சு
வாஷிங்டன்: ஏன் இந்த ஷட்டவுன்... ஒவ்வொரு அமெரிக்கரும், என்ன நடந்தது என்பதை புரி்ந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த மூடல் நடவடிக்கையால் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அமெரிக்க அரசு இயந்திர செயல்பாடும் முடங்கிப் போயுள்ளது.
தேசியப் பூங்காக்கள் மூடப்பட்டு விட்டன, அரசு துறைகள் செயல்படவில்லை. ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க போர் நினைவிடங்களும் கூட மூடப்பட்டு விட்டன. தேசிய நினைவுச் சின்ன அருங்காட்சியகமும் மூடப்பட்டுள்ளது.

வரலாறு காணாத பரபரப்பு
கடந்த 17 ஆண்டுகளில் நடந்துள்ள முதல் மூடல் நடவடிக்கை இது என்பதால் அமெரிக்க மக்கள் பெரும் பரபரப்படுன் காணப்படுகின்றனர். தலைநகர் வாஷிங்டனில் அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

தொடர்கிறது இழுபறி
இந்த மூடல் நடவடிக்கை எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை. அதுதொடர்பான அறிகுறியையும் காணோம். நாடு முழுவதும் ஒபாவின் அதிரடி நடவடிக்கை குறித்த பேச்சாகவே உள்ளது.

ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றம்
அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஒபாமாவின் பணியாளர்களும் அனுப்பப்பட்டனர்
அதிபர் ஒபாமாவின் பணியாளர்களும் கூட குறைக்கப்பட்டு விட்டனர். மிகவும் சொற்பமான ஊழியர்கள் மட்டுமே அவருடன் உள்ளனர். மற்றவர்கள் அனுப்பப்பட்டு விட்டனர்.

ராணுவத்தில் ஆள் குறைப்பு இல்லை
அதேசமயம், ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படையில்ஆள் குறைப்புஎதுவும் இல்லை. அங்கு முழு அளவில் வீரர்கள், பணியாளர்கள் பணியில் தொடர்கின்றனர்.

சிவில் பணியாளர்கள் குறைப்பு
அதேசமயம், பென்டகன், தனது சிவில் பணியாளர்கள் 8 லட்சம் பேரில் பாதிப் பேரை கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

குடியரசுக் கட்சியினரே பொறுப்பு- ஒபாமா
இந்த நிலையில் இந்த ஷட் டவுன் நடவடிக்கை குறித்து ஒபாமா கூறுகையில், இந்த நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது. ஆனால் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். குடியரசுக் கட்சியினர் அரசுக்கு எதிராக கொள்கைப் போரில் ஈடுபட்டுள்ளனர். அவர்களே இன்றைய நிலைக்குக் காரணம். பல கோடி அமெரிக்கர்களுக்கு சுகாதாரத் திட்டம் போய்ச் சேருவதற்கு அவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications