For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆச்சரியம்.. ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.44 லட்சம்.. ஊரெல்லாம் இதே பேச்சு.. என்ன காரணம்..?

தங்கத்தினால் ஆன குடிநீர் பாட்டில் ரூ.44 லட்சமாம்

Google Oneindia Tamil News

ரோம்: ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.44 லட்சம் என்றால் நம்ப முடிகிறதா?.. நம்பித்தான் ஆக வேண்டும்.. இந்த செய்திதான் இணையத்தில் வேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது.

குடிக்கும் தண்ணீரை, விலை கொடுத்து வாங்குவோம் என்று உலக மக்கள் ஒருபோதும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்..

திண்ணைகளிலும், தெருக்களிலும், இலவச தண்ணீர் பந்தல்களை வைத்த தமிழகம் இது.. முன்பின் தெரியாதவர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் தாக்கத்தை தீர்த்த பாரம்பரியம் நம்முடையது.

இதே விஜயதசமி நாளில்..96 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்...3 முறை தடை..கடந்து வந்த பாதை இதே விஜயதசமி நாளில்..96 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்...3 முறை தடை..கடந்து வந்த பாதை

 காஸ்ட்லி பாட்டில்

காஸ்ட்லி பாட்டில்

இன்று நிலைமையே தலைகீழாகிவிட்டது.. பாலைவிட தண்ணீரின் விலை அதிகமாகிவிட்டது.. இயற்கை வரமாக அளித்த தண்ணீருக்கு விலை வைத்து விற்க தொடங்கிவிட்டோம்... ஒரு பாட்டில் குடிநீர் 20 ரூபாய் முதல் 40 ரூ வரை விற்கப்படுகிறது.. இதுவே ஸ்டார் ஹோட்டலுக்குள் சென்றால், ஒரு பாட்டில் மினரல் வாட்டர் 60 ரூபாய் பில் போடுகிறார்கள்.

 சுத்த தங்கம்

சுத்த தங்கம்

ஆனால், ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.44,95,830 லட்சத்திற்கு விற்கப்படுகிறதாம்.. இதுதான் உலகிலேயே விலைமதிக்க முடியாத குடிநீர் பாட்டில் ஆகும்.. இந்த தண்ணீர் பாட்டில் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது... பாட்டில் சுமார் 750 மில்லி தண்ணீர் கொண்டது. ஆனால், அந்த தண்ணீர் பாட்டிலில் அப்படி என்ன ஸ்பெஷல்? மொத்தமும் சுத்த தங்கத்தால் ஆனது.

 இரு துருவங்கள்

இரு துருவங்கள்

24 கேரட் தங்கத்தால் தயாரானது.. இதற்காகவே பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது.. ஃபெர்னான்டோ அல்டமிரனோ என்பவர்தான் இந்த தங்க தண்ணீர் பாட்டிலை டிசைன் செய்துள்ளார்... இன்னொரு ஸ்பெஷலும் உள்ளது, உலகின் எதிர் துருவங்களில் இருக்கும் பிரான்ஸ், பிஜி நாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை இந்த பாட்டிலில் நிரப்பி உள்ளனர்.. இந்த தண்ணீரை குடித்தால், அதிக உத்வேகம் கிடைக்கும்.. அதிக சுவையாக இருக்கும் என்கிறார்கள்.. காஸ்ட்லி விலைக்கு இதுவும் ஒரு காரணமாம்.

 ஜப்பான்

ஜப்பான்

இதுபோலவே ஜப்பான் நாட்டில் கோனா நிகரி என்ற தண்ணீர் பாட்டில் ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது... இதன் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், ஹவாய் தீவின் ஆழ்கடலில் சுமார் 2000 மீட்டர் ஆழத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான் இந்த தண்ணீர்.. இதை குடித்தால் உடலின் எடை குறையுமாம்.. புத்துணர்வு கிடைக்குமாம்.. அதனாலேயே 30 ஆயிரம் கொடுத்து அதை பலரும் வாங்கி வருகின்றனர்.

English summary
Water Bottle costs Rs 44 lakh worlds most expensive bottle
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X